கொரோனா விழிப்புணர்வுக்காக
பெண்களுக்கு ஆன்லைனில் கோலப்போட்டி
கூடுதல் டி.ஜி.பி. ரவி அறிவிப்பு
FILE COPY
கொரோனா பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பெண்களுக்கான ஆன்லைன் கோலப்போட்டி ஒன்றை கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ரவி அறிவித்துள்ளார்.
கொரோனா விழிப்புணர்வு போட்டி
கொரோனா பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ரவி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கொரோனாவையொட்டி ஊரடங்கு காலகட்டத்தில் தனது குடும்பத்தின் செயல்பாடு குறித்து, சிறப்பான ஓவியமாக வரைந்திட ஆன்லைன் மூலமாக சிறுவர்-சிறுமிகளுக்காக நடத்தப்படும் போட்டி ஒன்றை அறிவித்துள்ளார்.
4 வயது முதல் 10 வயது வரை உள்ளவர்கள் ஒரு பிரிவாகவும், 11 வயது முதல் 16 வயது வரையிலான சிறுவர், சிறுமிகள் மற்றொரு பிரிவாகவும் இந்த போட்டியில் கலந்து கொள்ளலாம்.
மே மாதம் 3-ந் தேதிக்குள் போட்டியில் கலந்து கொள்ளும் சிறுவர்-சிறுமிகள் தங்களது ஓவியங்களை ஆன்லைன் மூலம் அனுப்பி வைக்கவேண்டும்.
கோலப்போட்டி
‘போ, போ, கொரோனாவே போ’ என்ற தலைப்பில் பெண்கள் கலந்து கொள்ளும் கோலப்போட்டியும் நடத்தப்படுகிறது.
பெண்கள் தங்களது கோலத்தை மே-3 ந்தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும்.
இதேபோல ஆண்கள், கொரோனா காலத்தில் தங்களது மனைவிகளுக்கு வீட்டில் எவ்வாறு உதவி செய்தனர் என்பது பற்றி வீடியோ படம் ஒன்றையும் தயாரித்து அனுப்பலாம்.
THANKS TO DAILYTHANTHI 28/04/2020
சிறந்த ஓவியங்கள், வீடியோ படங்கள் மற்றும் கோலங்களுக்கு பரிசு காத்திருக்கிறது.
இதுதொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ள 73388 54386, 95000 87529 என்ற செல்போன் எண்களுக்கு தொடர்புகொண்டு பேசலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துளிர்கல்வி வாசக நண்பர்களுக்கு வணக்கம், இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தயவுசெய்து SHARE செய்ய மறக்க வேண்டாம்! நட்பில் இணைந்திருங்கள்! நன்றி!!!


No comments:
Post a Comment
Please Comment