முதுமைக்கேற்ற சிறந்த உணவுகள் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

முதுமைக்கேற்ற சிறந்த உணவுகள்

முதுமைக்கேற்ற சிறந்த உணவுகள் 

நாற்பது வயதிற்கு மேல் எலும்பு தன் வலிமையை இழக்கிறது. ஆகையால் முதியவர்கள் சற்று கீழே விழுந்தாலும் எலும்பு முறிவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. அதைத் தவிர்க்க சுண்ணாம்புச் சத்துள்ள உணவுகளைச் சற்று அதிகமாகச் சாப்பிட வேண்டும். 

பால், கேழ்வரகு, முருங்கைக் கீரை, வெந்தயக்கீரை, அகத்திக்கீரை, கருவேப்பிலை, மீன், நண்டு, இறால், சுறா ஆகியவற்றில் சுண்ணாம்புச் சத்து நிறைய உள்ளது. பால் ஓத்துகொள்ளாதவர்கள் உணவில் தயிரைச் சேர்த்துக் கொள்ளவேண்டும். 

வயதான காலத்தில் மலச்சிக்கல் தவிர்க்க இயலாத ஓன்றாகும். அதைத் தவிர்க்க நார்ச்சத்து அதிகம் உள்ள உணவை சேர்த்துக் கொள்ள வேண்டும். 

உதாரணம்:- 

கேழ்வரகு, கோதுமை, கொள்ளு, கீரை, வாழைத் தண்டு, முட்டைக்கோஸ், காலிபிளவர், புடலங்காய், பாகற்காய், பேரீச்சம்பழம், மாம்பழம், அத்திப்பழம், கொய்யாப்பழம், மிளகு, கொத்தமல்லி, மிளகாய், வெந்தயம் போன்றவைகள். நம் நாட்டில் எட்டு வகையான மில்லட் என்னும் தானியங்கள் உள்ளன. 

உதாரணம்:- 

கொள்ளு, ராகி, சோளம், கம்பு, தினை போன்றவை. முதுமைக்கேற்ற எல்லாவித சத்துக்களும் சிலதானியங்களில் இருக்கின்றன. குறைந்தது வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை சிறுதானிய உணவுகளைச் சேர்த்துக் கொள்ளவும்.

The best foods for aging

The bone loses its strength by the age of forty. Therefore, older people are more likely to have fractures even if they fall slightly. To avoid it you need to eat a little more of lime-rich foods.

There is a lot of lime in milk, cashews, drumsticks, dill, agave water, oregano, fish, crab, shrimp and sharks. Those who refrain from milk should include yogurt in their diet.

 Constipation is inevitable in old age. To avoid this, foods that are high in fiber should be included.

For example: -

Vegetables, wheat, beans, lettuce, banana stem, cabbage, cauliflower, paprika, syrup, pear, mango, fig, guava, pepper, coriander, chilli, dill. There are eight varieties of millet in our country.

For example: -

Rice, ragi, corn, rye, millet etc. All kinds of anti-aging nutrients are found in some varieties. Include small meals at least two or three times a week.

No comments:

Post a Comment

Please Comment