வங்கிகளின் பரிவர்த்தனை நேரம் குறைப்பு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

வங்கிகளின் பரிவர்த்தனை நேரம் குறைப்பு

வங்கிகளின் பரிவர்த்தனை நேரம் குறைப்பு 

 ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் வங்கிகளின் பரிவர்த்தனை நேரம் குறைப்பு காலை 10 முதல் மதியம் 2 மணி வரை செயல்படும் ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் வங்கிகள் பரிவர்த்தனை நேரம் மே 3-ம் தேதி வரை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

கரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற் காக, நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதையடுத்து, வங்கிகளில் கூட்டம் சேருவதைத் தடுக்கும் வகையில், வங்கிகளில் பரிவர்த்தனை நேரம் நேரம் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை என குறைக்கப்பட்டது. 

 இதற்கிடையே, மத்திய அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளை பயனாளிகள் பெறுவதற்கு வசதியாக, வங்கிகளின் பரிவர்த்தனை நேரம் பழையபடி மாலை 4 மணி வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், ஊரடங்கு உத்தரவை மே 3-ம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. 

தற்போது மத்திய அரசு வழங்கியுள்ள நிவாரண உதவி பெரும்பாலான பயனாளி களுக்கு வழங்கப்பட்டுவிட்டதால், வாடிக்கை யாளர்கள் வருகை வெகுவாகக் குறைந்துள்ளது. 

 மே 3-ம் தேதி வரை.. இதையடுத்து, வங்கி பரிவர்த்தனை நேரத்தைக் குறைப்பது குறித்து ஆலோ சிக்கப்பட்டது. அதன்படி, வங்கிகள் பரி வர்த்தனை நேரம் மே 3-ம் தேதி வரை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை என குறைக்கப்பட்டுள்ளது. 

இப்புதிய நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக, மாநில அளவிலான வங்கியாளர்கள் கூட்டமைப்பின் தமிழக ஒருங்கிணைப்பாளர் எஸ்.சி.மொகந்தா வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.
THE HINDU TAMIL 16/04/2020

No comments:

Post a Comment

Please Comment