வரலாற்றில் இன்று 07/04/2020 - ThulirKalvi Blogs

Latest

Search This Site

வரலாற்றில் இன்று 07/04/2020

*🔵நாடும் ⚖️ நடப்பும்*

*🇳🇪 வரலாற்றில் இன்று 🇳🇪*


               _*🌹செவ்வாய் 🌹*_

*✍️பதிவு நாள்;  07.04.2020*

*கிரிகோரியன் ஆண்டின் 97 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 98 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 268 நாட்கள் உள்ளன.*

*🔵நிகழ்வுகள்*

🖌️1521 – பெர்டினென்ட் மகலன் பிலிப்பீன்சின் சேபு தீவை அடைந்தார்.

🖌️1541 – பிரான்சிஸ் சேவியர் போர்த்துக்கீச இந்தியாவுக்கான பயணத்தை மேற்கொண்டு லிஸ்பன் நகரில் இருந்து புறப்பட்டார்.

🖌️1795 – பிரான்ஸ் மீட்டர் அளவு முறையை அறிமுகப்படுத்தியது.

🖌️1827 – ஆங்கிலேய வேதியியலாளர் ஜோன் வோக்கர் தான் கண்டுபிடித்த தீக்குச்சியை விற்பனைக்கு விட்டார்.

🖌️1906 – வேசுவியஸ் மலை தீக்கக்கியதில் நேப்பில்சில் பலத்த சேதம் ஏற்பட்டது.

🖌️1906 – ஸ்பெயின், மற்றும் பிரான்ஸ் ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் மொரோக்கோ வந்தது.

🖌️1927 – முதலாவது தொலை தூர தொலைக்காட்சி சேவை வாஷிங்டன் டிசி, நியூயோர்க் நகரம் ஆகியவற்றிற்கிடையில் இடம்பெற்றது.

🖌️1928 – வால்ட் டிஸ்னி தனது புகழ்பெற்ற கார்ட்டூன் பாத்திரமான மிக்கி எலியின் படத்தை வரைந்தார்.

🖌️1939 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலி அல்பேனியாவை முற்றுகையிட்டது.

🖌️1942 – இரண்டாம் உலகப் போர்: ஆட்மிரால்ட்டி தீவுகளை ஜப்பான் கைப்பற்றியது.

🖌️1943 – யூதப் படுகொலைகள்: உக்ரேனில் டெரெபோவ்லியா என்ற இடத்தில் நாசிகள் 1,100 யூதர்களை அரை நிர்வாணமாக்கி நகர வீதிவழியே அழைத்துச் சென்று பின்னர் அவர்களைச் சுட்டுக் கொன்று புதைத்தனர்.

🖌️1945 – இரண்டாம் உலகப் போர்: உலகின் மிகப்பெரும் போர்க்கப்பலான ஜப்பானின் யமாட்டோ ஓக்கினாவா அருகில் தென்கோ நடவடிக்கையின் போது அமெரிக்கப் கடற்படையினரால் மூழ்கடிக்கப்பட்டது.

🖌️1946 – பிரான்சிடம் இருந்தான சிரியாவின் விடுதலை அங்கீகரிக்கப்பட்டது.

🖌️1948 – உலக சுகாதார நிறுவனம் (WHO) ஐக்கிய நாடுகள் அவையால் தொடங்கப்பட்டது.

🖌️1948 – சீனாவில் ஷங்காயில் பௌத்தமத தலம் ஒன்று எரிந்ததில் 20 புத்த குருக்கள் கொல்லப்பட்டனர்.

🖌️1963 – யூகோஸ்லாவியா சோசலிசக் குடியரசாகியது. மார்ஷல் டீட்டோ அதிபரானார்.

🖌️1964 – ஐபிஎம் தனது System/360 ஐ அறிவித்தது.

🖌️1978 – யாழ்ப்பாணத்தில் இலங்கையின் காவல் துறை அதிகாரி பஸ்தியாம்பிள்ளை உட்பட பல காவல் துறையினர் போராளிகளால் கொல்லப்பட்டனர்.

🖌️1978 – நியூத்திரன் குண்டு தயாரிக்கும் திட்டத்தை ஐக்கிய அமெரிக்கா கைவிட்டது.

🖌️1983 – ஸ்ரோரி மஸ்கிரேவ், டொன் பீட்டர்சன் இருவரும் மீள் விண்ணோடத்தில் இருந்து விண்ணில் நடந்த முதல் வீரர்களானார்கள்.

🖌️1989 – கொம்சொமோலெட்ஸ் என்ற சோவியத் நீர்மூழ்கிக் கப்பல் நோர்வேயில் விபத்துக்குள்ளாகி மூழ்கியதில் 42 பேர் கொல்லப்பட்டனர்.

🖌️1992 – ஸ்ருப்ஸ்கா குடியரசு விடுதலையை அறிவித்தது.

🖌️1994 – ருவாண்டாவின் கிகாலியில் டூட்சி இனத்தவர்களை அழிக்கும் படலம் ஆரம்பமானது.

🖌️2001 – மார்ஸ் ஒடிசி விண்கலம் ஏவப்பட்டது.

🖌️2003 – அமெரிக்கப் படைகள் பக்தாத் நகரைக் கைப்பற்றினர். சதாம் உசேனின் அரசு இரு நாட்களின் பின்னர் வீழ்ந்தது.

🖌️2007 – தமிழ்நாட்டில் சென்டூரில் நெடுஞ்சாலை அமைப்புக்கென கொண்டுசெல்லப்பட்ட வெடிபொருட்கள் அடங்கிய வாகனம் ஒன்று வெடித்ததில் 16 பேர் கொல்லப்பட்டனர்.

*🔵பிறப்புகள்*

🖌️1506 – பிரான்சிஸ் சவேரியார், எசுப்பானிய மதப்பரப்புனர், புனிதர், இயேசு சபையை நிறுவியவர் (இ. 1552)

🖌️1770 – வில்லியம் வேர்ட்ஸ்வொர்த், ஆங்கிலேயக் கவிஞர் (இ. 1850)

🖌️1889 – கேப்ரியெலா மிஸ்திரெல், நோபல் பரிசு பெற்ற சிலி கவிஞர் (இ. 1957)

🖌️1903 – மு. பாலசுந்தரம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (இ. 1965)
1920 – ரவி சங்கர், இந்திய சித்தார்கலைஞர் (இ. 2012)

🖌️1926 – பிரேம் நசீர், இந்திய நடிகர் (இ. 1989)

🖌️1935 – எஸ். பி. முத்துராமன் தமிழ்த்திரைப்பட இயக்குனர்.

🖌️1944 – கெர்ஃகாத் சுரோடர், செருமனியின் 7வது அரசுத்தலைவர்

🖌️1954 – ஜாக்கி சான், ஆங்காங் நடிகர்

🖌️1964 – ரசல் , நியூசிலாந்து நடிகர்

*🔵இறப்புகள்*

🖌️1804 – டூசான் லூவர்சூர், எயிட்டி இராணுவத் தளபதி (பி. 1743)

🖌️1947 – ஹென்றி ஃபோர்ட், அமெரிக்க தொழிலதிபர் (பி. 1863)
2014 – வி. கே. மூர்த்தி, இந்திய ஒளிப்பதிவாளர் (பி. 1923)

🖌️2015 – கமலினி செல்வராஜன், ஈழத்து நாடக, திரைப்பட நடிகை, வானொலி ஒலிபரப்பாளர் (பி. 1954)

*🔵சிறப்பு தினம்*

🖌️உலக சுகாதார தினம்.

➖➖➖➖➖➖➖➖➖➖

No comments:

Post a Comment

Please Comment