கணினி ஆசிரியர்களுக்கு ஏப்ரல் சம்பளம் தர உத்தரவு
சென்னை:
அரசு பள்ளி தற்காலிக கணினி ஆசிரியர்களுக்கு, ஏப்ரல் மாத சம்பளம் மட்டும் வழங்கும்படி, பள்ளி கல்வி செயலர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக அரசு பள்ளிகளில், தற்காலிக அடிப்படையில், 1,564 கணினி ஆசிரியர்கள், தொகுப் பூதியத்தில் பணியாற்றுகின்றனர்.
இவர்களுக்கு, 2019 டிசம்பர் வரை, பணி நீட்டிப்பு வழங்கப் பட்டிருந்தது. இதன்பின், 2020 ஜனவரி முதல் டிசம்பர் வரை பணி நீட்டிப்பு வழங்க, பள்ளி கல்வி செயலருக்கு, பள்ளி கல்வி இயக்குனர்தரப்பில் கருத்துரு அனுப்பப்பட்டது.
இந்த கருத்துரு பரிசீலனையில் உள்ளதாகவும், தற்காலிக ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு தேவையா என்பதற்கான விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், பள்ளி கல்வி இயக்குனரகத்துக்கு, பள்ளி கல்வி செயலகம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், பணி நீட்டிப்பு குறித்து முடிவு எடுக்க, அவகாசம் தேவைப்படுவதால், ஏப்ரல் மாதத்துக்கு மட்டும் சம்பளம் வழங்க, பள்ளி கல்வி செயலர் உத்தரவிட்டுள்ளார்.
துளிர்கல்வி வாசக நண்பர்களுக்கு வணக்கம், இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தயவுசெய்து SHARE செய்ய மறக்க வேண்டாம்! நட்பில் இணைந்திருங்கள்! நன்றி!!!
No comments:
Post a Comment
Please Comment