கரோனா தாக்கம் குறைந்த பின்னர் பள்ளிகள் திறப்பு குறித்து ஆய்வு
அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
மத்திய, மாநில அரசுகள் கரோனா தாக்கம் முற்றிலும் இல்லை என அறிவித்தபிறகு, தமிழக முதல்வர் ஒரு குழுவினை அமைத்து பள்ளிகள் திறப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளவுள்ளார், என அமைச்சர் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த நம்பியூரில் கரோனா நிவாரணப் பொருட்களை வழங்கிய அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்கள் கரோனா வைரஸ் தடுப்புப் பணியில் ஈடுபடத் தயாராகவுள்ளனர். இப்பணிக்கு விருப்பம் தெரிவித்துள்ள ஆசிரியர் கள் பட்டியல், முதன்மைக் கல்வி அலுவலர் வாயிலாக மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டுள்ளது.
மத்திய, மாநில அரசுகள் கரோனா தாக்கம் முற்றிலும் இல்லை என அறிவித்தபிறகு, தமிழக முதல்வர் ஒரு குழுவினை அமைத்து பள்ளிகள் திறப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்.
அதன்பின்னர் பள்ளி திறக்கப் படும் தேதி அறிவிக்கப்படும். இருப் பினும், அடுத்த கல்வியாண்டுக் கான பாடப்புத்தகங்கள் மற்றும் ஷு, ஷாக்ஸ் போன்றவை தயார் நிலையில் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
துளிர்கல்வி வாசக நண்பர்களுக்கு வணக்கம், இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தயவுசெய்து SHARE செய்ய மறக்க வேண்டாம்! நட்பில் இணைந்திருங்கள்! நன்றி!!!

No comments:
Post a Comment
Please Comment