ஊழியர்களின் சேவைகளுக்கு நன்றி தெரிவிக்க இணையதளம்
ஊரடங்கு உத்தரவின்போது அத்தி யாவசிய சேவையாற்றி வரும் ஊழியர்களுக்கு நன்றி தெரிவிப்ப தற்கான இணையதளத்தை பாஜக தலைவர் ஜே.பி.நட்டா நேற்று தொடங்கி வைத்தார்.
டெல்லியில் நேற்று இந்த இணையதளத்தை ஜே.பி. நட்டா தொடங்கிவைத்துப் பேசும்போது, “கரோனா பரவுவதைத் தடுக்க மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் எந்த அரசியலும் இல்லை. அனை வரும் ஒன்றிணைந்து வைரஸை எதிர்க்க வேண்டிய நேரமிது.
எனவே அரசியல், குற்றச்சாட்டுகள் சொல்ல இது நேரமில்லை.
இந்த இணையதளம் மூலம் சுகாதாரத்துறை நிபுணர்கள், டாக்டர்கள், தூய்மைப் பணியாளர் கள், போலீஸார், அவசர சேவை யில் பணியாற்றுவோர் என அனை வருக்கும் நன்றி சொல்ல முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்திலும் ஜே.பி. நட்டா பதிவு செய்துள்ளார். கரோனா வைரஸை எதிர்த்துப் போரிட்டு வரும் சுகாதாரத்துறை நிபுணர்கள், டாக்டர்கள், தூய்மைப் பணியாளர்கள், போலீஸார், அவசர சேவை புரிவோருக்கு நன்றி தெரிவிக்கவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அண்மை யில் கேட்டுக்கொண்டார்.
அதைத் தொடர்ந்தே தற்போது இந்த இணையதளம் தொடங்கப்பட் டுள்ளது.
அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்டோர் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்து அதை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். -
பிடிஐ
No comments:
Post a Comment
Please Comment