உலகின் அதிவேக இன்டர்நெட்; ஒரே நொடியில் 1,000 HD படங்களை தரவிறக்கம் செய்யலாம்! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

உலகின் அதிவேக இன்டர்நெட்; ஒரே நொடியில் 1,000 HD படங்களை தரவிறக்கம் செய்யலாம்!

உலகின் அதிவேக இன்டர்நெட்; ஒரே நொடியில் 1,000 HD படங்களை தரவிறக்கம் செய்யலாம்! 
உலகின் அதிவேக இன்டர்நெட்; ஒரே நொடியில் 1,000 HD படங்களை தரவிறக்கம் செய்யலாம்!
thulirkalci.com

ஒரு விநாடியில் 1,000 HD திரைப்படங்களை தரவிறக்கம் செய்ய முடிகிற அளவிற்கு அதி வேகமான இணைய சேவையை கண்டுபிடித்து அசத்தியுள்ளனர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆய்வாளர்கள். 

தற்போதைய காலகட்டத்தில் இணையதளம் இல்லை என்றால் எதுவுமே இல்லை என்பது போல மாறி இருக்கிறது. இணையத்தின் வேகம் அதிகமாக இருந்தாலும் அந்த வேகம் போதுமானதாக இல்லை என்றே பெரும்பாலானவர்கள் கூறுகின்றனர். 

2ஜி சேவையில் தொடங்கி தற்போது 5ஜி வரை வளர்ந்திருக்கிறது இணையதளத்தின் வேகம். இந்த வேகம் போதவில்லை என்றாலும் கூட ஆப்டிக்கல் ஃபைபர் மூலமாக அதிவேக இணைய சேவையை பெற்றுக்கொள்ளும் வசதிகளும் பல நாடுகளில் வந்துவிட்டன. 

அந்தவகையில், தற்போது உலகின் அதிவேக இணையசேவையை கண்டுபிடித்துள்ளனர் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள். மொனாஷ், ஸ்வைன்பேர்ன் மற்றும் RMIT ஆகிய மூன்று பல்கலைக்கழகங்களை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ள இந்த இணையத்தின் வேகம் நொடிக்கு 44.2 டெராபைட்ஸ் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்த வேகத்தில் ஒரு நொடியில் 1000 ஹெச்டி திரைப்படங்களை தரவிறக்கம் செய்ய முடியும். உலகிலேயே ஆப்டிக்கல் ஃபைபர்பிராட்பேண்டுகளில் உள்ள ஆப்டிக்கல் சிப் மூலமாக சோதனை செய்யப்பட்டுள்ள அதிவேக இணைய சேவை இதுவே எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

எதிர்காலத்தில் இணையசேவை எவ்வாறு இருக்கும் என்பதற்கான முன்னோட்டமே இது எனவும் ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

Please Comment