10-ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளி வைக்கும் சாத்திய கூறுகள் இல்லை
அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
10-ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளி வைக்கும் சாத்திய கூறுகள் இல்லை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி ஈரோடு, மே.22- ஈரோட்டில் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-
வருகிற 31-ந் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. ஜூன் மாதம் 15-ந்தேதிக்குள் இயல்புநிலை திரும்பி விடும். எனவே 10-ம் வகுப்பு தேர்வுகள் இனிமேல் தள்ளிப்போவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை.
அறிவித்தபடி ஜூன் 15-ந்தேதி தேர்வுகள் தொடங்கும். முதலில் 3 ஆயிரத்து 84 தேர்வு மையங்கள் மட்டுமே இருந்தது.
தற்போது மாணவ -மாணவிகள் படித்த அந்தந்த பள்ளிக்கூடங்களே தேர்வு மையங்களாக அறிவிக்கப்பட்டு இருப்பதால் தேர்வு மையங்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 672 ஆக உயர்ந்து உள்ளது.
தேர்வை முன்னிட்டு மாணவ -மாணவிகளுக்கு ஆன்லைன் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. எனவே தேர்வு குறித்து மாணவ -மாணவிகள் அச்சப்பட தேவையில்லை.
இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
No comments:
Post a Comment
Please Comment