பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்காக வெளிமாவட்ட மாணவர்களை அழைத்து வர ஏற்பாடு
சென்னை
வெளி மாவட்டங்களில் தங்கியுள்ள பத்தாம் வகுப்பு மாணவர்கள் இ பாஸ் பெற்று மே 25ஆம் தேதிக்குள் அழைத்து வர தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது
இது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குனராக வழிகாட்டுதலின்படி அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகள் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை விபரத்தை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் தெரியப்படுத்த வேண்டும் ஆசிரியர்கள் வெளியில் சென்றிருந்தால் மே 20க்குள் பள்ளிகளுக்கு பணிக்கு திரும்ப அறிவுறுத்த வேண்டும்.
வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் உள்ள மாணவர்களை 25க்குள் அவர்களின் இருப்பிடத்திற்கு தலைமை ஆசிரியர்கள் வரவழைக்க வேண்டும்
இதற்கான இ பாஸ் பெறும் பணிகளை தலைமையாசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது மேலும் கரோனா பாதித்து பத்தாம் வகுப்பு மாணவர்களின் விவரத்தை அனுப்ப மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.


No comments:
Post a Comment
Please Comment