10-ம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்க வேண்டும் மு.க.ஸ்டாலின், மற்றும் தினகரன் வலியுறுத்தல்
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் ஆகியோர் வலியு றுத்தியுள்ளனர்.
மு.க.ஸ்டாலின் நேற்று வெளி யிட்ட அறிக்கை:
4-ம் கட்ட ஊரடங்கு மே 31 வரை தொடருகிறது. 5-ம் கட்ட ஊரடங்கு குறித்து உறுதியாக எதையும் சொல்ல முடியாத சூழலில், ஜூன் 1-ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித் துறை அமைச் சரின் பிடிவாதமான நிலைப்பாடு, மாணவர்கள் மீதான அக்கறையற்ற தன்மையையே காட்டுகிறது.
அரசு நெருக்கடியை உரு வாக்கி அச்சுறுத்துவதால் மா ணவர்களும், பெற்றோரும் மன அழுத்தத்துக்கு ஆளாகி உள் ளனர். மாணவர்களின் உயிருடன் விளையாடும் விபரீதப் போக்கை கைவிட்டு, பொதுத்தேர்வைத் தள்ளி வைக்க வேண்டும். பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு, உரிய அவகாசத்துடன் தேர்வை நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்
தனது ட்விட்டர் பக்கத்தில், ‘12 மாவட்டங்களில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக் கப்படவில்லை. இச்சூழலில் 10-ம் வகுப்பு தேர்வுகளை நடத் துவது தேவையற்ற விபரீதத்தில் முடிந்துவிடும். 10-ம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்க வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார்.

No comments:
Post a Comment
Please Comment