10 ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து கவ்வித்துறையில் மூன்று விதமான திட்டங்கள் பரிசீலனையில் உள்ளதாக தகவல் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

10 ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து கவ்வித்துறையில் மூன்று விதமான திட்டங்கள் பரிசீலனையில் உள்ளதாக தகவல்

10 ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து கவ்வித்துறையில் மூன்று விதமான திட்டங்கள் பரிசீலனையில் உள்ளதாக தகவல் 

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டாலும் கல்வித்துறையின் பரிசீலனையில் வேறு விதமான மூன்று திட்டங்கள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.தமிழகத்தில் ஜூன் 15ஆம் தொடங்க உள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான, பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. 

கல்வித்துறையின் பரிசீலனையில் வேறு மூன்று விதமான திட்டங்கள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

 # பத்தாம் வகுப்பு தேர்வை நடத்தி விடைத்தாள்களை தாராள மனதுடன் திருத்தி தேர்வு முடிவுகளை வெளியிட கூடியது முதல் திட்டம் எனச் சொல்லப்படுகிறது. 

 # நான்காவது முறையாக ஜூலை ஒன்றாம் தேதிக்கு தேர்வை தள்ளி வைப்பது இரண்டாவது திட்டம் எனக் கூறப்படுகிறது. 

 # மூன்றாவது திட்டம், பொதுத்தேர்வை நடத்தாமல் , காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்களை தேர்ச்சி பெறச் செய்வது என தெரிகிறது. 

 * இந்த மூன்று திட்டங்களில் ஒன்றை செயல்படுத்துவதற்கு கல்வித்துறை முடிவு செய்திருப்பதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் முதல் திட்டத்தை, கல்வித்துறை செயல்படுத்த அதிக வாய்ப்பு இருப்பதாக, கடந்த 17ஆம் தேதி தந்தி தொலைகாட்சி செய்திவெளியிட்டது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

Please Comment