11 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் சூரிய மண்டலத்தில் நுழையும் வால் நட்சத்திரம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

11 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் சூரிய மண்டலத்தில் நுழையும் வால் நட்சத்திரம்

11 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் சூரிய மண்டலத்தில் நுழையும் வால் நட்சத்திரம் 


சுமார் 11 ஆயிரத்து 600 ஆண்டுகளுக்குப் பிறகு சூரிய மண்டலத்தில் ஒரு பச்சை வால் நட்சத்திரம் நுழையப் போவதாக வானியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 


பச்சை வால் நட்சத்திரம்


குறிப்பிட்ட அந்தப் பச்சை வால் நட்சத்திரம், கடந்த 13-ந் தேதி பூமிக்கு அருகில் பயணிக்கத் தொடங்கியதாகவும், வருகிற 27-ந் தேதி சூரியனை நோக்கிச் செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 இது ஆஸ்திரேலியாவின் தெற்கு திசையில் இருந்து வடக்குத் திசை நோக்கிப் பயணிக்கும் எனவும், சூரியக் குடும்பத்தைக் கடப்பதற்கு முன்பாக இந்த நட்சத்திரம் சூரிய ஒளியில் பிரதிபலிக்கும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 


பனி மற்றும் தூசு



பனி மற்றும் தூசுகளால் ஆன இந்த வால் நட்சத்திரம், ‘ஸ்வான்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த நட்சத்திரத்தின் வால் மட்டும் 77 லட்சம் கிலோமீட்டர் நீளம் உடையதாகும். 

வெறும் கண்கள்



 இது பூமியில் இருந்து சுமார் 5.3 கோடி மைல்கள் தூரத்தில் இருக்கும் எனவும், இந்த நட்சத்திரம் இம்மாத இறுதி வாரத்தில் கண்களுக்குத் தெரியும் எனவும் வானியல் நிபுணர்கள் கணித்துள்ளனர். 

 மேலும் இந்த நட்சத்திரத்தை 5 முதல் 6 நாட்கள் வரை கண்ணாடி ஏதுமின்றி வெறும் கண்களாலேயே கண்டு மகிழலாம் எனவும் தெரிவித்திருக்கின்றனர்.

No comments:

Post a Comment

Please Comment