21-ந்தேதி பள்ளிக்கு வர வேண்டும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு உத்தரவு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

21-ந்தேதி பள்ளிக்கு வர வேண்டும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு உத்தரவு

21-ந்தேதி பள்ளிக்கு வர வேண்டும்  தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு உத்தரவு

சென்னை, மே.18- அனைத்து பள்ளி ஆசிரியர்களும் வருகிற 21-ந்தேதி பணிக்கு வர வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. இதன் காரணமாக, தனியார் பள்ளி நிர்வாகங்களும், தங்கள் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை பணிக்கு திரும்ப சொல்லி செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பி வருகின்றனர். 

அதில், ‘ஆசிரியர்கள் வெளி மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்தால் உடனடியாக ஆன்லைனில் அனுமதி பெற்று பணிக்கு 21-ந் தேதிக்குள் திரும்ப வேண்டும். முதன்மை கல்வி அலுவலர்களுக்கு வருகைப் பதிவேடு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே அதற்கு தயாராகுங்கள்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 இந்த திடீர் அறிவிப்பால் தனியார் பள்ளி ஆசிரியர்கள் என்ன செய்வது என்று தெரியாமல், விழிபிதுங்கி போய் இருக்கின்றனர். மேலும், ஊரடங்கு காலத்தில் பொது போக்குவரத்துக்கு தடை உள்ள நிலையில், எப்படி பணிக்கு வருவது? என்று புலம்பி வருகின்றனர்.


No comments:

Post a Comment

Please Comment