கரோனா தடுப்பு பணிகளுக்காக
ஒப்பந்த அடிப்படையில் 2,570 செவிலியர்கள் நியமனம்
முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
இதையும் படிக்கவும் அரசு பணித் தேர்வுகளுக்கான (TNPSC) மாதிரி வினா விடை
கரோனா தடுப்பு பணிகளை துரித படுத்தும்விதமாக 6 மாத ஒப்பந்த அடிப்படையில் 2,570 செவிலியர்கள் நியமிக்கப்பட்டு வருவதாக முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.
தமிழகத்தில் தற்போது வைரஸ் தொற்று பாதிப்பு அதிகமாகி வரு கிறது. பல்வேறு பகுதிகளில் கரோனா தொற்றுக்கு மருத்து வர்கள், செவிலியர்கள், காவலர் கள், தூய்மைப் பணியாளர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதிகளவு தொற்று உள்ளவர்கள் இருக்கும் பகுதிகளில் மருத்துவ மனைகள் தவிர பல்வேறு சிகிச்சை நிலையங்கள் தொடங்கப்பட் டுள்ள நிலையில், அதில் பணி யாற்ற செவிலியர்கள் அதிகளவில் தேவைப்படுகின்றனர். இதை கருத்தில் கொண்டு தற்போது ஒப்பந்த அடிப்படையில் செவி லியர்கள் நியமிக்கப்பட்டு வரு கின்றனர்.
530 மருத்துவர்கள்
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு பன்முக நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது. இதன் ஓர் அங்கமாக மருத்துவப் பணியாளர் கள் தேர்வு வாரியம் மூலம் ஏற்கெனவே 530 மருத்துவர்கள், 2,323 செவிலியர்கள், 1,508 ஆய்வக நுட்புனர்கள் மற்றும் 2,715 சுகாதார ஆய்வாளர்கள் பணியமர்த்தப்பட்டு சிறப்பாக பணிசெய்து வருகின்றனர்.
இதையும் படிக்கவும் ‘டாலர்’ என்றால் என்ன அர்த்தம்?
இதைத் தொடர்ந்து, 6 மாதங் களுக்கு ஒப்பந்த அடிப்படையில் 2,570 செவிலியர்களுக்கு பணி நிய மன ஆணை வழங்கப்பட்டு வருகிறது. இச்செவிலியர்கள் ஆணை கிடைத்த 3 நாட்களுக்குள் பணியில் சேர அறிவுறுத் தப்படுகின்றனர்.
மேலும் தீவிரமைடயும்
மருத்துவக் கல்லூரி மருத் துவமனைகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனை களுக்கு தலா 40 செவிலியர்களும், தாலுகா மருத்துவமனைகளுக்கு தேவைக்கேற்ப 10 முதல் 30 செவி லியர்களும் பணியமர்த்தப்படு வார்கள். இதன்மூலம் கரோனா தடுப்பு பணிகள் மேலும் தீவிரமைடயும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
Please Comment