பட்ஜெட் விலையில் உருவாகும் என்ட்ரி லெவல் ரெட்மி 5ஜி ஸ்மார்ட்போன் Entry Level Redmi 5G Smartphone Developed at Budget Price
சியோமியின்
ரெட்மி பிராண்டு என்ட்ரி லெவல் 5ஜி ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் உருவாகி
வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
குவால்காம் நிறுவனம் 5ஜி வசதி கொண்ட ஸ்னாப்டிராகன்
600 சீரிஸ் பிராசஸரை உருவாக்கி வருவதாக கடந்த வாரம் தகவல் வெளியானது.
இந்நிலையில்,
தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களில் ரெட்மி ஸ்மார்ட்போன் மாடலில் புதிய பிராசஸர்
வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன்
எஸ்எம்6350 சிப் மற்றும் 5ஜி மோடெம் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
ரெட்மி 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்கள் தற்போதைய 4ஜி மாடல் விலையிலேயே கிடைக்கும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய தகவல்களின் படி ரெட்மி 5ஜி ஸ்மார்ட்போன் விலை 150
டாலர்கள், இந்திய மதிப்பில் சுமார் 11 ஆயிரம் ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என
கூறப்படுகிறது. இந்த விலையிலும் ரெட்மி ஸ்மார்ட்போன் அதிவேக 5ஜி வசதி வழங்கும் என
தெரிகிறது.
அதிவேக 5ஜி தவிர புதிய ஸ்மார்ட்போன் எல்சிடி ஸ்கிரீன், மூன்று அல்லது
நான்கு கேமரா சென்சார்கள், 4000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
குவால்காம் தவிர மீடியாடெக் மற்றும் ஹூவாய் போன்ற
நிறுவனங்களும் குறைந்த விலையில் 5ஜி பிராசஸர்களை வெளியிட இருக்கின்றன.
இவை முறையே
எம்டி6853 5ஜி மற்றும் கிரின் 720 5ஜி என அழைக்கப்படும் என தெரிகிறது. இதே போன்று
சாம்சங் நிறுவனமும் எக்சைனோஸ் 880 5ஜி பிராசஸரின் குறைந்த விலை மாடலை வெளியிட
இருக்கிறது.
Entry Level Redmi 5G Smartphone Developed at Budget Price
It has been reported that the Redmi brand of Xiaomi is launching the entry level 5G smartphone at a budget.
Last week it was reported that Qualcomm is developing a 5G feature Snapdragon 600 series processor.
At this juncture, it is reported that the new processor will be offered in the Redmi smartphone model. The new Redmi smartphone will be equipped with Snapdragon SM 6350 chip and 5G modem.
Redmi 5G smartphone models are expected to be available at the current 4G model price.
According to the current reports, the Redmi 5G smartphone is expected to be priced at $ 150 and can be set at around Rs 11,000 in India. At this price, the Redmi smartphone seems to offer high-speed 5G.
The new smartphone, besides the high-speed 5G, is said to offer LCD screen, three or four camera sensors, 4000 mAh battery and 18 watt fast charging.
Other than Qualcomm, companies like MediaTek and Huawei are also offering low-cost 5G processors.
These are known as the MT6853 5G and the Grin 720 5G respectively. Similarly, Samsung is also releasing a low-cost model of the Exynos 880 5G processor.
No comments:
Post a Comment
Please Comment