ஆன்லைனில் தமிழ் கவிதை அரங்கம் இன்று இரவு 8 மணிக்கு ஒளிபரப்பு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

ஆன்லைனில் தமிழ் கவிதை அரங்கம் இன்று இரவு 8 மணிக்கு ஒளிபரப்பு

சாகித்ய அகாடமி சார்பில் ஆன்லைனில் தமிழ் கவிதை அரங்கம் இன்று இரவு 8 மணிக்கு ஒளிபரப்பு 

 சாகித்ய அகாடமி சார்பில் ஆன் லைன் தமிழ் கவிதை அரங்கம் நிகழ்ச்சி இன்று (மே 13) இரவு 8 மணிக்கு முகநூல் இணைய தளத்தில் நேரடி ஒளிபரப்பு செய் யப்படுகிறது. 

இதுதொடர்பாக சாகித்ய அகா டமியின் செயலர் கே.சீனிவாச ராவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

 சாகித்ய அகாடமி, பல்வேறு இந்திய மொழிகளில் கவிதை அரங்கம் நிகழ்ச்சியை ஆன்லைன் நேரடி ஒளிபரப்பு மூலமாக மே 9-ம் தேதி முதல் தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்நிகழ்ச்சி வரும் 16-ம் தேதி நிறைவடையும். அந்த வகை யில், ஆன்லைன் தமிழ் கவிதை அரங்கம் நிகழ்ச்சி இன்று (மே 13) இரவு 8 மணிக்கு முகநூல் இணைய தளத்தில் (https://bit.Iy/2YQ80JY) நேரடி ஒளிபரப்பு செய்யப்படு கிறது. 

இதில் கவிஞர்கள் சிற்பி பாலசுப்ரமணியம், மாலன், புதுவை யுகபாரதி, சுந்தர முருகன் ஆகியோர் கவிதை வாசிக்கிறார் கள். இந்த கவிதை அரங்கம் நிகழ்ச்சி யைத் தொடர்ந்து 24 இந்திய மொழி களில் ஆன்லைன் தொடர் இலக் கிய நிகழ்ச்சிகளையும் சாகித்ய அகாடமி நடத்த இருக்கிறது. இதில், குழு விவாதம், கவிதைகள் வாசித்தல், கதைகள் வாசித்தல் ஆகியவை இடம்பெறும். 

இந் நிகழ்ச்சி மே 17-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை தொடர்ந்து நடை பெறும். பெரும்பாலான நிகழ்ச்சிகள் சாகித்ய அகாடமியின் யூடியூப் சேனல் அல்லது முகநூல் பக்கத் தில் நேரடி ஒளிபரப்பு செய்யப் படும். இந்த தொடர் நிகழ்ச்சி முடிவடைந்த பின்னர் ஒருசில நிகழ்ச்சிகள் யூடியூப் சேனலில் எப்போதும் பார்க்கும் வகையில் பதிவேற்றம் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Please Comment