விற்பனைக்கு வரும் ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ்! விலை மற்றும் சிறப்பம்சங்கள்
ரெட்மி 9 நோட் ப்ரோ மேக்ஸ் நாளை முதல் விற்பனைக்கு வர உள்ளது. கடந்த மார்ட் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இது லாக்டவுன் காரணமாக விற்பனைக்கு வரவில்லை.
இப்போது மீண்டும் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.
ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸில் 6 ஜிபி மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் 16,499 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.
அதேபோல 6ஜிபி மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை 17,999 ரூபாயாக உள்ளது. 8 ஜிபி மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜின் விலை 19,999 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த போன் வெள்ளை, கருப்பு மற்றும் நீல நிறங்களில் கிடைக்கும். நாளை இந்த ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸின் விற்பனை தொடங்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ்
சிறப்பம்சம்
ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஆண்ட்ராய்ட் 10-ல் இயங்குகிறது. இது 6.67 இன்ச் டிஸ்பிளேவுடன், ஐபிஎஸ் டிஸ்பிளேவையும் கொண்டுள்ளது.
இதில் 64 ஜிபி மற்றும் 128 ஜிபி யுஎஃப்எஸ் 2.1 இண்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன்களை கொண்டுள்ளது.
முன்பக்க கேமரா 32 மெகாபிக்சலும், பின்பக்க கேமரா 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 8 மெகா பிக்சல் சென்சார் உள்ளது.
ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் 33 வால்ட் ஃபாஸ் சார்ஜிங் வசதியுடன் 5,020 எம் ஏ எச் பேட்டரியைக் கொடுள்ளது.
இதன்மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், நாளை விற்பனைக்கு வருகிறது. Mi.com, Amazon.com, Xiaomi தளங்களில் ஆன்லைனில் விற்பனைக்கு வருகிறது. ஆன்லைன் ஆஃபராக ஏர்டெல் இரட்டிப்பு டேட்டா வசதி வழங்கப்பட உள்ளது.
No comments:
Post a Comment
Please Comment