ஆளுநர், முதல்வர், தலைவர்கள் மேதின வாழ்த்து - ThulirKalvi Blogs

Latest

Search This Site

ஆளுநர், முதல்வர், தலைவர்கள் மேதின வாழ்த்து

கரோனாவுக்கு எதிராக போராடி வெற்றி பெறுவோம் ஆளுநர், முதல்வர், தலைவர்கள் மேதின வாழ்த்து 

 இன்று மே தினம் கொண்டாடப்படு கிறது. இதையொட்டி ஆளுநர், முதல் வர், அரசியல் தலைவர்கள் தொழிலா ளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள் ளனர். ஆளுநர் பன்வாரிலால் புரோ ஹித்: 

இந்நன்னாளில் நாட்டின் பொரு ளாதாரத்தை வளமடையச் செய்யும் உழைப்பாளிகளின் சேவையை நினைவுகூர்ந்து தேசமே அவர்களுக் குத் தலைவணங்கி மரியாதை செய் கிறது. நாம் அனைவரும் கொடிய கரோனா வைரஸ் பரவலின் தாக்கத்தை எதிர்த்து உறுதியுடன் போராடி வெற்றி பெறுவோம்! 

 முதல்வர் பழனிசாமி: ‘மகத்தான செயல் எதுவும் கடின உழைப்பு இல்லாமல் சாதிக்க முடிவதில்லை’ என்ற விவேகானந்தரின் பொன் மொழியை மனதில் நிறுத்தி, மக்கள் அனைவரும் தொய்வின்றி கடினமாக உழைத்தால் வாழ்வில் வெற்றி பெறு வது நிச்சயம். மே தின வாழ்த்துகள். 

 புதுச்சேரி முதல்வர் நாராயண சாமி: தொழிலாளர் நலனைப் பேணி காக்கவும், அவர்களின் எதிர் காலத்தை வளமுள்ளதாக்கவும் புதுச்சேரி அரசு எல்லா வகையிலும் தோள்கொடுக்கும். 

 திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: ஒருபுறம் கரோனா; மறுபுறம் மத்திய - மாநில அரசுகளின் பாராமுகம். தொழிலாளர் சமுதாயத்தின் பக்கம் திமுக எப்போதுமே துணை நிற்கும். 

 தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: ஊரடங்கால் வேலையிழந்த தொழிலாளர்களின் நிலையை உயர்த்த மத்திய, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

 பாமக நிறுவனர் ராமதாஸ்: கரோ னாவை விரட்டியடித்து தொழிலாளர் களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைய பொருளாதார சுழற்சியை தொடங்கி வைப்போம். 

 மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: கரோனாவால் வேலை வாய்ப்பை இழந்துவாடும் தொழிலா ளர்களின் துயரத்தைப் போக்க அரசுகள் முன்வர வேண்டும். 

 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: கரத்தாலும், கருத்தாலும் உழைக்கக் கூடிய அனைத்து தொழிலாளர்களுக் கும் மேதின வாழ்த்துகள். 

 இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன்: மக் கள்நலன் சார்ந்த கொள்கைகளை முன்னெடுக்க மதச்சார்பற்ற, ஜன நாயக சக்திகள் ஒன்றுபட வேண்டும். 

 விசிக தலைவர் திருமாவளவன்: நீண்டகால போராட்டங்களால் பெற்ற உரிமைகளைப் பறிக்கும் மத்திய - மாநில அரசுகளின் மக்கள் விரோதப் போக்கை முறியடிப்போம். 

 தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: தொழிலாளர்களுக்கு உரிமைகள் கிடைப்பதை உறுதிசெய்ய மத்திய, மாநில அரசுகள் மட்டுமின்றி மக்களும் உறுதுணையாக இருக்க வேண்டும். 

 அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: வேலையிழப்பு, ஊதிய இழப்பை சந்தித்துள்ள தொழி லாளர்களுக்கு துணை நிற்போம். 

 மேலும், மமக தலைவர் ஜவாஹி ருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன், ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர், தலைவர் ரவி பச்சமுத்து, கொமதேக பொதுச் செயலாளர் ஈஸ்வரன் உள்ளிட்டோ ரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


No comments:

Post a Comment

Please Comment