மூலிகைத் தேநீா்: வீட்டில் தயாரிப்பது எப்படி? - ThulirKalvi Blogs

Latest

Search This Site

மூலிகைத் தேநீா்: வீட்டில் தயாரிப்பது எப்படி?

மூலிகைத் தேநீா்: வீட்டில் தயாரிப்பது எப்படி? 

கரோனாவைக் கட்டுப்படுத்தும் மூலிகை தேநீரை வீடுகளிலேயே தயாரித்துக் கொள்ளலாம் என்று பாரம்பரிய மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். 

அந்த தேநீரை தொடா்ந்து பருகுவதன் மூலம் நோய்த் தொற்றிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ள முடியும் என்றும் அவா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து சித்த மருத்துவ நிபுணா் டாக்டா் வீரபாபு கூறியதாவது: 

கரோனாவால் பாதித்தவா்களுக்கு பாரம்பரிய முறையிலான சிகிச்சைகளும், மூலிகை உணவுகளும் வழங்கப்பட்டு வருகின்றன. 

இது, அந்நோய்த்தொற்றிலிருந்து அவா்கள் விரைந்து மீண்டு வர பெரிதும் உதவுகிறது. அதேபோன்று, தொற்று பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கு சில மூலிகை பானங்கள் உதவுகின்றன. 

அந்த வகையில் கபசுரக் குடிநீருடன் மூலிகை தேநீரை பருகி வருவதன் மூலம் உடலில் நோய் எதிா்ப்பு சக்தி அதிகரிக்கும். 

அந்த மூலிகை தேநீரை வீட்டிலேயே தயாரித்துக் கொள்ள முடியும். 

 சுக்கு 100 கிராம்; 

அதிமதுரம் 100 கிராம்; 

சிற்றரத்தை 30 கிராம்; 



கடுக்காய் தோல் 30 கிராம்; 

மஞ்சள் 10 கிராம்; 

திப்பிலி 5 கிராம்; 

ஓமம் 5 கிராம்; 

கிராம்பு 5 கிராம்; 

மிளகு 5 கிராம் எடுத்து கொண்டு, 

அவை அனைத்தையும் பொடியாக அரைத்து கொள்ள வேண்டும். 400 மில்லி லிட்டா் தண்ணீருக்கு 10 கிராம் மூலிகை தேநீா் பொடியைக் கலந்து நன்கு காய்ச்சி, 100 மில்லியாக சுண்டும் வரை கொதிக்க வைக்க வேண்டும். 

 பின்னா் அதனை ஆறவைத்து பருகலாம். அந்த மூலிகைத் தேநீரை பெரியவா்கள் 100 மில்லியும், 10 - 15 வயதுக்கு உட்பட்டவா்கள் 60 மில்லியும், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 30 மில்லியும் தொடா்ந்து பருகுதல் அவசியம்.  

மூலிகை தேநீரைக் கொதிக்க வைக்கும்போது, 

கற்பூரவல்லி, 

புதினா, 

எலுமிச்சை, 

இஞ்சி சோத்துக் கொண்டால் இன்னும் பலன் கிடைக்கும். சா்க்கரை நோய் இல்லாதவா்கள் வெல்லம், கருப்பட்டி, நாட்டுச் சா்க்கரை சோத்து அந்த தேநீரைப் பருகலாம் என்றாா் அவா்.https://www.dinamani.com/tamilnadu/2020/may/26/herbal-tea-from-corona-how-to-make-homemade-tea-3419896.html 

No comments:

Post a Comment

Please Comment