மூத்த குடிமக்களுக்கான புதிய ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்தும் எல்.ஐ.சி!
மூத்த குடிமக்களுக்காக புதிய ஓய்வூதிய திட்டத்தை எல்.ஐ.சி அறிமுகப்படுத்துகிறது.
மூத்த குடிமக்களுக்கான பிரதான் மந்திரி வயா வந்தனா யோஜனா ஓய்வூதிய திட்டத்தைஎல்ஐசி அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த திட்டத்தை வழக்கம்போல முகவர்களிடம் இருந்து நேரடியாகவோ அல்லது LIC-ன் www.licindia.in என்ற இணையதளம் மூலமாக ஆன்லைனிலோ வாங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021 மார்ச் 31 வரை, இத்திட்டம் 7.40% பி.ஏ என்ற வருமானத்தை உறுதியளிக்கிறது.
10 வருட முழு காலத்திற்கும் செலுத்த வேண்டிய மாதாந்திரத் தொகையானது 7.66% பி.ஏ-க்கு சமமானதாக இருக்கும். மூத்த குடிமக்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்த தொகையைப் பொறுத்து மாதத்திற்கு குறைந்தபட்சமாக 1,000 ரூபாயும், அதிகபட்சமாக மாதத்திற்கு 10,000 ரூபாயும் பெறலாம்.
அடுத்த இரண்டு நிதியாண்டுகளில் விற்கப்படும் பாலிசிகளுக்கானஉறுதிப்படுத்தப்பட்ட வட்டி விகிதம், ஒவ்வொரு நிதியாண்டின் தொடக்கத்திலும் நிதி அமைச்சகத்தால் மதிப்பாய்வு செய்யப்பட்டு முடிவு செய்யப்படும்.
இந்தத் திட்டத்தின் கீழ் ஒருவர் பெறக்கூடிய அதிகபட்ச ஓய்வூதியம் மாதத்திற்கு 9,250 ரூபாய், காலாண்டில் 27,750 ரூபாய், அரையாண்டுக்கு 55,500 ரூபாய் மற்றும் ஆண்டுக்கு 1,11,000 ரூபாய் ஆகும். பாலிசியை வாங்கும் போதே, ஓய்வூதியம் பெறுபவர் மாத / காலாண்டு / அரை ஆண்டு அல்லது வருடாந்திர ஓய்வூதிய முறையை தேர்வு செய்துக் கொள்ளலாம்.
மூன்று பாலிசி ஆண்டுகளுக்குப் பிறகு கொள்முதல் விலையில் 75 சதவீதம் வரை கடனை அளிக்க இந்த திட்டம் அனுமதிக்கிறது.
No comments:
Post a Comment
Please Comment