பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை எப்போது தொடங்குவது? அமைச்சர் அவர்களின் அறிவுரை - ThulirKalvi Blogs

Latest

Search This Site

பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை எப்போது தொடங்குவது? அமைச்சர் அவர்களின் அறிவுரை

பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை எப்போது தொடங்குவது? அமைச்சர் அவர்களின் அறிவுரை

ஈரோடு 





10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளி யான பின்னர்தான், பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை தொடங்க வேண்டும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

ஈரோடு மாவட்டம் கோபியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளி யான பின்னர்தான், அனைத்து பள்ளி களிலும் மாணவர் சேர்க்கையை தொடங்க வேண்டும். அதற்கு முன் னர் மாணவர்சேர்க்கையை நடத்தும் பள் ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். 



தனி யார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால், அப்பள்ளியின் மீது அரசு நடவடிக்கை எடுக்கும். சென்னை, திருவள்ளூர், அரியலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால், பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்கள் செல்ல மறுக்கின்றனர். 

எனவே, அங்கு திருத்த வேண்டிய விடைத்தாள் வேறு மாவட்டத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. தனியார் பள்ளி களில் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக ஆதாரத்துடன் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

No comments:

Post a Comment

Please Comment