மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு: மே மாதத்துக்குள் அறிக்கை தாக்கல். - ThulirKalvi Blogs

Latest

Search This Site

மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு: மே மாதத்துக்குள் அறிக்கை தாக்கல்.

மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு: மே மாதத்துக்குள் அறிக்கை தாக்கல். 

  அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு வழங்குவது குறித்த பரிந்துரையை மே மாத இறுதிக்குள் அரசிடம் சமர்ப்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசுப் பள்ளிகளில் படித்து, நீட் தேர்வில் தேர்ச்சிப் பெறும் மாணவர்களுக்கு, மருத்துவப் படிப்பில் சேர தனி இடஒதுக்கீடு அளிப்பது குறித்து ஆய்வு செய்யும் குழுவின் தலைவராக, ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கலையரசன் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது தலைமையிலான குழு அதற்கான பணிகளைத் தீவிர மாக மேற்கொண்டுவருகிறது. 

  அதன்படி அரசுப் பள்ளிகளில் கடந்தாண்டு படித்த மாணவர்களின் எண்ணிக்கை, மருத்துவப் படிப்பில் அவர்களுக்கு கிடைத்த இடங்கள், மேலும் நீட் தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி ஆகியவை குறித்து இக்குழு தீவிரமாக ஆலோசித்துவருகிறது. அதுமட்டுமின்றி கல்வியாளர்கள், பெற்றோர் ஆகியோரிடம் இது குறித்து கருத்துகளும் கேட்கப்பட்டுவருகின்றன. முதலாவதாக சேலத்தில் பெற்றோர், கல்வியாளர்களிடம்கருத்து கேட்கப்பட் டுள்ளது. 

  அதேபோல் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களிலும் கருத்துக் கேட்க திட்டமிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் தனது பரிந்துரையை அரசுக்கு மே மாத இறுதிக்குள் அளிப்பதற்கு குழு முடிவு செய்துள்ளது. அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் தனி இடஒதுக்கீடாக, 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை ஒதுக்க திட்டமி டப்பட்டுள்ளது. 

  மொத்தமுள்ள 6000 இடங்களில், 15 சதவீதம் எனில் 900 இடங்களும், 20 சத வீதம் எனில் 1, 200 இடங்களும் கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது. அதனடிப்படையில், இந்தாண்டு முதலே, மருத்துவப்படிப்பு சேர்க்கையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்குத் தனி இடஒதுக்கீடு வழங்கும் அறிவிப்பு வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Please Comment