உருவானது ‘உம்பன்’ புயல்
மேற்கு வங்கம் நோக்கி நகர வாய்ப்பு
சென்னை
வங்கக் கடலில் நிலவிவந்த காற்ற ழுத்த தாழ்வு மண்டலம் ‘உம்பன்’ புயலாக வலுப்பெற்றுள்ளது. இது மேற்கு வங்கம் நோக்கி நகர வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத் தின் தென்னிந்திய தலைவர் எஸ்.பாலச்சந்திரன் செய்தியாளர் களிடம் நேற்று கூறியதாவது:
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதி யில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இருந்தது. இது தற் போது ‘உம்பன்’ புயலாக உருவாகி உள்ளது.
ஒடிசா மாநிலம் பாரதீப் பகுதியில் இருந்து 1,100 கிமீ தொலைவில் இது நிலைகொண் டுள்ளது.
அடுத்து வரும் நாட்களில் வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து, 19, 20 தேதிகளில் மேங்குவங்க மாநில கடலோர பகுதியை நோக்கி நகர்ந்து கரையை கடக்கக் கூடும். இதன் காரணமாக, 17, 18 தேதி களில் மத்திய வங்கக் கடலுக்கும், 19, 20 தேதிகளில் வடக்கு வங்கக் கடல் பகுதிக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம்.
வெப்பநிலை உயரும்
இந்த புயலால் தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு வழக்கத் தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை உயர வாய்ப்புள் ளது. நேற்று மாலை 5.30 மணி வரை சென்னையில் 105 டிகிரி பதிவானது.
தமிழகத்தில் அடுத்த 2 நாட் களுக்கு வெப்பச் சலனம் காரண மாக கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

No comments:
Post a Comment
Please Comment