இன்று விமானப்படை சாகசம் கடற்படை கப்பல்கள் ஒளிரும் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

இன்று விமானப்படை சாகசம் கடற்படை கப்பல்கள் ஒளிரும்

ரோனா போராளிகளுக்கு முப்படை சார்பில் நன்றி தெரிவிக்க இன்று விமானப்படை சாகசம் கடற்படை கப்பல்கள் ஒளிரும் பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா பாராட்டு 

 கரோனா போராளிகளுக்கு நன்றி தெரிவிக்கும் முப்படையினரின் திட்டத்துக்கு பிரதமர் மோடியும் அமைச்சர் அமித் ஷாவும் பாராட்டு தெரிவித்துள்ளனர். முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் நேற்று முன்தினம் செய்தியாளர் களுக்கு பேட்டி அளித்தார். 

அப் போது ராணுவத் தளபதி எம்.எம்.நரவனே, விமானப்படைத் தளபதி ஆர்.கே.எஸ். பதாவ்ரியா, கடற்படைத் தளபதி கரம்பிர் சிங் ஆகியோரும் உடன் இருந்தனர். அப்போது பிபின் ராவத் கூறும் போது, “கரோனா வைரஸ் பரவல் தடுப்பு, பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடு பட்டுள்ளவர்களுக்கு நாட்டு மக்கள் ஆதரவாக இருந்து வருகின்றனர். 

இதுபோல, இப்பணியில் ஈடுபட் டுள்ள மருத்துவர்கள், செவிலியர் கள், துப்புரவு பணியாளர்கள், காவல் துறையினர், ஊடக துறை யினர் உள்ளிட்டோருக்கு முப்படை களின் சார்பில், நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். 

 இதன்படி, ஞாயிற்றுக்கிழமை (இன்று) விமானப்படையினரின் சாகசம் நடைபெறும். கடற்படை கப்பல்கள் மின் விளக்குகளால் ஜொலிக்க உள்ளன. ராணுவத்தினர் பேண்டு வாத்தியங்கள் இசைக்க உள்ளனர். மேலும் மருத்துவமனை கள் மீது பூ இதழ்கள் தூவப் படும்” என்றார். 

  இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் அடுத்தடுத்த பதிவுகளில் கூறியிருப்பதாவது: 

 கரோனா வைரஸுக்கு எதிராக நம் நாடு கடுமையாக போரிட்டு வருகிறது. இதில் துணிச்சலான மருத்துவ பணியாளர்கள் முன் வரி சையில் நின்று போரிட்டு வருகிறார் கள். அவர்கள் மிகவும் சிறப்பான வர்கள். அவர்களையும் அவர் களுடைய குடும்பத்தினரையும் நாட்டு மக்கள் பாராட்டுகின்றனர். 

 நம் நாட்டை எப்போதும் பாது காக்கும் பணியில் முப்படை வீரர் கள் விழிப்புடன் உள்ளனர். மேலும் பேரிடர் காலங்களிலும் பாதிக்கப் பட்டவர்களுக்கு அவர்கள் உதவி வருகின்றனர். அந்த வகையில், கரோனா வைரஸிலிருந்து நாட்டை விடுவிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள போராளிகளுக்கு புதுமையான முறையில் நன்றி தெரிவிக்க நமது முப்படையினர் திட்டமிட்டுள்ளனர். 

இதற்காக அவர்களுக்கு நன்றியை யும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார். இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ட்விட்டரில் கூறும்போது, “கரோனா போராளி களுக்கு நன்றி தெரிவிக்கும் முப் படையினரின் முடிவு வரவேற்கத் தக்கது. இதன் மூலம் மருத்துவர் கள், சுகாதாரம் மற்றும் துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு மன உறுதியும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். இந்த இக்கட்டான தருணத்தில், கரோனா போராளி களுக்கு நாட்டு மக்கள் அனை வரும் ஒன்றிணைந்து நன்றி தெரி விப்போம்” என பதிவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Please Comment