தமிழகத்தில் இந்த குறிப்பிட்ட இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில சேலம், கரூர், நாமக்கல், திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், தெற்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டு அதி தீவிர புயலாக உருவாகியிருக்கும் இந்த புயல் ஆங்கிலத்தில் AMPHAN (அம்பான்) என்று கூறப்பட்டாலும், அதனை உம்பன் (UM-PUN) என்றுதான் அழைக்க வேண்டும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது.
மேலும், தமிழகத்தில் உம்பன் புயலின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், தேனி, நாமக்கல், கரூர், திருச்சி, தென்காசி, பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நன்றி : தினமணி
சென்னையைப் பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையானது 37 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸையும் ஒட்டி இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:
Post a Comment
Please Comment