சோறு வடித்த தண்ணீர் உடல் எடையைக் குறைக்க உதவுமா?
வீட்டில் சோறு வடித்த தண்ணீரை கீழே ஊற்றி அதை வீணாக்குகிறோம் ஆனால் அதை வைத்து இப்படி உடல் எடையைக் குறைக்கலாம்
என்கிறார்கள். எப்படி என்று பார்க்கலாமா..?
அரிசி வேக வைத்த நீரை வீட்டில் கஞ்சித் தண்ணீர் என்பார்கள். அதை சோறு வடித்ததும் சூடாக எடுத்து அதில் கொஞ்சம் உப்பு, மிளகுத் தூள் சேர்த்து கலந்து குடிக்கலாம்.
அவ்வாறு இதைக் குடிப்பதால் உணவு சாப்பிட்டது போல் வயிறு நிறைவாக இருக்கும்.
சோறு சாப்பிடுவதால் 650 - 1000 கலோரிகள் அதிகரிக்கும். இதே கஞ்சித் தண்ணீர் குடிப்பதால் 150 கலோரிகள் மட்டுமே அதிகரிக்கும்.
கலோரி குறைவாக இருப்பது மட்டுமன்றி உடல் எடையைக் குறைக்கவும் உதவும். உடல் நீர் வற்றுவதிலிருந்து பாதுகாக்கும். வயிற்றுப் போக்கு இப்படி மற்ற உடல் உபாதைகளுக்கும் உதவும்.
அதோடு மலச்சிக்கல், வைரஸ் தொற்று போன்றவற்றையும் குணமாக்க உதவுகிறது. உடல் சுருப்பாக இயங்கவும் உதவுகிறது.
கருப்பையில் நீர்க்கட்டிகளா..? இந்த வாழ்க்கை முறையை பின்பற்றினால் பிரச்னைகளைத் தவிர்க்கலாம்..!
அரிசி தண்ணீரை கண்டிஷ்னராக பயன்படுத்துவதும் நடைமுறையில் உள்ளது. இதை ஜப்பானியர்கள் பாரம்பரிய குறிப்பாக செய்து வருகின்றனர்.

No comments:
Post a Comment
Please Comment