மாணவர்களுக்கு சைபர் பாதுகாப்பு கையேடு வழங்குகிறது சி.பி.எஸ்.இ., - ThulirKalvi Blogs

Latest

Search This Site

மாணவர்களுக்கு சைபர் பாதுகாப்பு கையேடு வழங்குகிறது சி.பி.எஸ்.இ.,

மாணவர்களுக்கு சைபர் பாதுகாப்பு கையேடு வழங்குகிறது சி.பி.எஸ்.இ.,
மாணவர்களுக்கு சைபர் பாதுகாப்பு கையேடு வழங்குகிறது சி.பி.எஸ்.இ.,

புதுடில்லி: 

பள்ளி மாணவர்களுக்கான சைபர் பாதுகாப்பு கையேடுகளை சி.பி.எஸ்.இ., வழங்கி உள்ளது. 

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இருப்பினும் மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு பெரும்பாலான பள்ளிகள் ஆன்லைன் மூலம் வகுப்புகளை துவக்கி பாடங்களை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில் 9-ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்கர்களுக்கு என சி.பி.எஸ்.இ., சைபர் கிரைம் பாதுகாப்பு கையேடுகளை வழங்கி உள்ளது. இந்த கையேட்டில் ரிவென்ஜ், போர்னோகிராபி என்னும் தவறான போட்டோக்கள், வீடியோக்கள் , பழிதீர்க்கும் செயல்கள், சம்மதமின்றி வெளியாகும் தகவல்கள் பிளாக்மெயிலின் செயல்பாடுகள், உள்ளிட்டவை குறித்து கையேட்டில் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இது குறித்து சி.பி.எஸ்.இ.,யின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில் மாணவர்கள் எதிர் பாலினத்தவர்களுடன் மரியாதையுடன் நட்பு பாராட்ட வேண்டும். அவர்களுக்கும் சம மதிப்பை அளிக்க வேண்டும். அவர்களை ஒரு பொருளாகவோ, ஆசையாகவோ பார்க்க கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளார். 

மேலும் பகிரக்கூடாத போட்டோக்களால் மாணவர்களின் நலன் பாதிக்க கூடும். ஆன்லைனில் ஒரு முறை பகிரப்பட்டால் அதன் பாதுகாப்பு தன்மைக்கு கேள்விக்குறியாகும். எனவே மனநலன், புகழ் போன்றவற்றிற்கு கேடு விளைவிக்காத ஆன்லைன் பயன்பாட்டுவழிகள் குறித்து கையேட்டில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாக சி.பி.எஸ்.இ.,தெரிவித்து உள்ளது.

No comments:

Post a Comment

Please Comment