அறிவியல் அறிவோம் மனிதர்களைப் போல் விலங்குகளுக்கும் ஜலதோஷம், காய்ச்சல் வருமா?
வைரஸ் கிருமியால் பாலூட்டி களுக்கு ஜலதோஷமும் காய்ச்சலும் ஏற்படுகின்றன. வீட்டில் வளர்க்கும் நாய், பூனையிலிருந்து அனைத்துப் பாலூட்டிகளும் காய்ச்சலுக்கு உள்ளாகின்றன.
தாவரங்களைச் சாப்பிடும் விலங்குகள் மூலிகைத் தாவரங்களைத் தின்று குணப்படுத்திக்கொள்கின்றன. பிற விலங்குகள் சில நாட்கள் ஓய்வெடுத்து, குணம் பெறுகின்றன. தண்ணீரில் வசிக்கும் மீன்களுக்கும் ஊர்வனப் பிராணிகளுக்கும்கூட தொற்றின் காரணமாக உடல் வெப்பநிலை உயர்கிறது.
மீன்களின் உடல் வெப்பம் உயரும்போது, குளிர்ச்சியான பகுதியிலிருந்து வெப்பமான பகுதியை நோக்கிச் சென்றுவிடுகின்றன. ஊர்வனப் பிராணிகளுக்குச் சூழலுக்கு ஏற்ப உடல் வெப்பநிலையை மாற்றிக்கொள்ள இயலும் என்பதால், காய்ச்சலின்போது வெப்பத்தைக் குறைத்துக்கொள்கின்றன. மனிதர்களின் மூலம் விலங்குகளுக்கு ஜலதோஷமோ காய்ச்சலோ தொற்றுவதில்லை
No comments:
Post a Comment
Please Comment