கோடையில் உங்கள் சருமம் உலர்ந்து விடுகிறதா? இதோ ஈரப்பதமாக வைத்திருக்க சில வழிகள்! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

கோடையில் உங்கள் சருமம் உலர்ந்து விடுகிறதா? இதோ ஈரப்பதமாக வைத்திருக்க சில வழிகள்!

கோடையில் உங்கள் சருமம் உலர்ந்து விடுகிறதா? இதோ ஈரப்பதமாக வைத்திருக்க சில வழிகள்! 

கோடைக்காலம் வந்தாலே, பெரும்பாலானவர்களுக்கு சருமம் உலர்ந்து வறண்டுவிடும். முகத்தில் வெடிப்புகள் ஏற்பட்டு எரிச்சலூட்டும். சிலருக்கோ உதடுகள் வெடித்து ரத்தமே வரக்கூடும். பாளம்பாளமாக வெடித்துக் காயமாக இருக்கும். தொட்டாலே வலிக்கும். முகத்தைச் சுருக்கவோ, ஏன் சிரிக்கவோ கூட முடியாது. 

இதுபோன்ற சூழலில், உடலிலும் முகத்திலும் ஈரப்பதத்தைத் தக்க வைக்க என்ன செய்யலாம்? முகத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்க தேங்காய் எண்ணெய் தேங்காயில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் உங்கள் சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க உதவும். 

இது உங்கள் முகத்தை ஆரோக்கியமாகவும் இளமையாகவும் வைத்திருக்கும் இருக்கும். முகப்பரு வெடிப்பைத் தடுக்கக்கூடிய பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. 

 வெண்ணெய் வெண்ணெயில் புரதங்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. இது ஆரோக்கியமான இயற்கை மாய்ஸ்சரைசராக செயல்படுகிறது. மென்மையான மற்றும் ஒளிரும் சருமத்தைப் பெற உங்கள் உணவில் வெண்ணெய் சேர்த்துக்கொள்ளுங்கள். 

 ஓட்ஸ் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்த ஓட்ஸ், வறண்ட சருமத்தை எதிர்த்துப் போராடுவதற்கான சிறந்த உணவுகளில் ஒன்றாகும். வறண்ட சருமம் கொண்டவர்கள் உணவில் ஓட்ஸை சேர்த்துக்கொள்வது அவசியம். 

 சர்க்கரை வள்ளிக்கிழங்கு சர்க்கரை வள்ளிக்கிழங்கில் வைட்டமின் ஏ அதிகமாக இருக்கிறது. இது சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கவும் ஈரப்பதத்தை தக்கவைக்கவும் உதவுகிறது. வெறும் 35 கிராம் சர்க்கரை வள்ளிக்கிழங்கில், ஒரு நாளுக்குத் தேவையான விட்டமின் ஏ முழுமையாக இருக்கிறது.

No comments:

Post a Comment

Please Comment