இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பூசியை அமெரிக்கா உருவாக்கும் டிரம்ப் உறுதி - ThulirKalvi Blogs

Latest

Search This Site

இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பூசியை அமெரிக்கா உருவாக்கும் டிரம்ப் உறுதி

இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பூசியை அமெரிக்கா உருவாக்கும் டிரம்ப் உறுதி 

 வாஷிங்டன், மே.5- 

 இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பூசியை அமெரிக்கா உருவாக்கும் என்று டிரம்ப் கூறினார். 

  35 லட்சம் பேர் பாதிப்பு 

 உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோர தாண்டவம் ஆடி வருகிறது. உலக அளவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 35 லட்சத்தை தாண்டி விட்டது. அமெரிக்காவில் அதிக அளவில் கொரோனா பாதிப்பும், உயிர்ப்பலியும் ஏற்பட்டுள்ளது. இதுவரை தடுப்பூசி இல்லாத கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணி நடந்து வருகிறது. 

  டிரம்ப் உறுதி 

 இந்நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் அமெரிக்காவில் கொரோனாவுக்கான தடுப்பூசி உருவாக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். ரஷிய டெலிவிஷன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது, “தாமதமின்றி விரைவிலேயே தடுப்பூசி வந்து விடும்” என்று அவர் கூறினார். தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டால், அதை உலகம் முழுவதும் அனைவருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று ஐ.நா. பொதுச்செயலாளர் அண்டோனியா குடரஸ் ஏற்கனவே தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Please Comment