மாணவர்கள் மீண்டும் பள்ளிக்குச் செல்லத் தொடங்கியுள்ளனர்
ஆஸ்திரேலிய மாநிலங்கள் சிலவற்றில் மாணவர்கள் மீண்டும் பள்ளிக்குச் செல்லத் தொடங்கியுள்ளனர். கொரோனா நோய்ப் பரவலை முன்னிட்டு மாணவர்களுக்கு மார்ச் மாதத்திலிருந்து விடுப்பு வழங்கப்பட்டது.
கிருமிப் பரவல் குறைந்திருப்பதைத் தொடர்ந்து, பள்ளிகள் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளன. நியூ சவுத் வேல்ஸ், குவின்ஸ்லந்து ஆகிய மாநிலங்களில் உள்ள மாணவர்கள் பள்ளிக்குத் திரும்பியுள்ளனர். தற்போதைக்கு, இறுதி ஆண்டு மாணவர்கள், வாரத்திற்குக் குறைந்தது மூன்று முறை வகுப்புகளுக்குச் செல்வர்.
இருப்பினும், இம்மாத இறுதிக்குள் வகுப்புகள் அனைத்தையும் முழுவீச்சில் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மாநில அதிகாரிகள், ஆயிரக்கணக்கான லிட்டர் சவர்க்காரத்தையும் கிருமிநாசினி திரவத்தையும் பள்ளிகளுக்கு விநியோகம் செய்துள்ளனர்.
வகுப்பறைகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை குறைக்கப்படுவதுடன் மாணவர்களிடையே பாதுகாப்பு இடைவெளி கடைப்பிடிக்கப்படுவது உறுதி செய்யப்படும்.
No comments:
Post a Comment
Please Comment