பஸ் போக்குவரத்து விரைவில் தொடங்கும் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

பஸ் போக்குவரத்து விரைவில் தொடங்கும்

பஸ் போக்குவரத்து விரைவில் தொடங்கும் மத்திய மந்திரி நிதின் கட்காரி தகவல் 

 புதுடெல்லி, மே.7- 

 கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த நாடு முழுவதும் வருகிற 17-ந் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்தநிலையில் மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள்துறை மந்திரி நிதின் கட்காரி நேற்று, இந்திய பஸ் மற்றும் கார் ஓட்டுனர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் ஆன்லைனில் கலந்துரையாடினார். 

 அப்போது, நிறுத்தம் செய்யப்பட்டுள்ள பொது போக்குவரத்து சேவையை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிகளை அரசு விரைந்து மேற்கொள்ளும். சில வழிகாட்டுதல்களுடன் பஸ் போக்கு வரத்து மீண்டும் தொடங்கும். வழிமுறைகள் வகுக்கப்பட்டு வருகின்றன என்று அவர் கூறினார். 

பஸ்கள் இயக்கப்படும் போது இடைவெளியை கடைப்பிடித்தல், கைகளை கழுவுதல், முக கவசம் அணிதல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கூறினார்.

No comments:

Post a Comment

Please Comment