பள்ளிகள் எப்போது திறக்கப்படும்?
அமைச்சர் பதில்
ஜூன் மாதம் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும். கோடை வெயில் அதிகமாக இருக்கும் பட்சத்தில் பள்ளிகள் திறப்பு தேதி தள்ளிப்போகும். ஆனால் இந்த ஆண்டு கொரோனாவால் நாட்டில் அசாதாரண சூழல் ஏற்பட்டு உள்ளது.
தள்ளிவைக்கப்பட்ட பொதுத்தேர்வு வழக்கமாக பள்ளிகள் திறக்கப்படும் ஜூன் மாதத்தில்தான் நடைபெற இருக்கிறது.
இதனால் பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் பதில் அளிக்கையில், “பள்ளிகள் திறப்பு குறித்து எந்த முடிவும் தற்போது எடுக்கப்படவில்லை. பொதுத்தேர்வை நடத்துவதற்கான பணிகள் குறித்து முதல்-அமைச்சர் உத்தரவு பிறப்பித்து உள்ளார். அந்த பணிகள்தான் ஜூன் மாதம் 1-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை நடக்கும்” என்றார்.

No comments:
Post a Comment
Please Comment