மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதியம் குறைக்கும் திட்டம் இல்லை - ThulirKalvi Blogs

Latest

Search This Site

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதியம் குறைக்கும் திட்டம் இல்லை

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதியம் குறைக்கும் திட்டம் இல்லை வதந்திகளை நம்ப வேண்டாம் என நிதியமைச்சகம் விளக்கம் 

 மத்திய அரசு ஊழியர்களின் ஊதி யத்தை குறைக்கும் எந்த திட்டமும் இல்லை என மத்திய நிதியமைச் சகம் விளக்கம் அளித்துள்ளது. கரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் அதிகரித்து வருவ தால் மே 17 வரை ஊரடங்கு நீட் டிக்கப்பட்டுள்ளது. 

இது, அரசுக்கு மிகப்பெரிய பொருளாதார நெருக் கடியை ஏற்படுத்தியிருக்கிறது. அரசுத் துறை மட்டுமின்றி தனியார் துறைகளும் பெரிய அளவில் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. 

 இதன் காரணமாக, நாடு முழு வதும் உள்ள பல்வேறு தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர் களுக்கான ஊதியத்தை பெரு மளவு குறைத்திருக்கின்றன. சில நிறுவனங்களில் ஆள்குறைப்பு நடவடிக்கைகளும் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தை குறைக்க பரிசீலிக்கப்பட்டு வருவ தாக சில ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் செய்திகள் வெளியாகி வருகின்றன. 

இதை மத்திய அரசு மறுத்துள்ளது. இதுபற்றி மத்திய நிதியமைச் சகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் நேற்று வெளியிடப்பட்ட பதிவில், ‘மத்திய அரசு துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் குறைக்கப்பட உள்ளதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. 

இது எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல் வெளியிடப்படும் பொய்ச் செய்திகள் ஆகும். இதை யாரும் நம்ப வேண்டாம். மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதியத்தை குறைக்கும் எந்த திட்டமும் அரசிடம் இல்லை’ என கூறப்பட்டுள்ளது. 

  கடந்த ஏப்ரலில்.. கடந்த ஏப்ரலிலும் இதேபோன்ற வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவின. ஓய்வூதியத்தில் 20 சத வீதத்தை மத்திய அரசு பிடித்தம் செய்ய உள்ளதாக அதில் தெரி விக்கப்பட்டிருந்தன. 

இது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலை யில், மத்திய அரசு மறுப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத் தக்கது.




No comments:

Post a Comment

Please Comment