மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்களின் எச்சரிக்கை
’’பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்து, முடிவுகள் வௌியான பிறகே அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும்.
அதற்கு முன்பாகத் தனியார் பள்ளிகளில் சேர்க்கை நடைபெற்றால், சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அத்துடன் தனியார் பள்ளிகளில் 10-ம் வகுப்புத் தேர்வுக்காக சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டால் அந்தப் பள்ளிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
ஊரடங்கு முடிவுக்கு வந்து, பள்ளிகள் தொடங்கும் முன்பே தனியார் பள்ளிகளில் கட்டணம் வசூலிப்பது கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

No comments:
Post a Comment
Please Comment