விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ள ஆசிரியர்களின் பட்டியல் CEO வெளியீடு. - ThulirKalvi Blogs

Latest

Search This Site

விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ள ஆசிரியர்களின் பட்டியல் CEO வெளியீடு.

விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ள ஆசிரியர்களின் பட்டியல் CEO வெளியீடு. 

கொரோனா வைரஸ் ( Covid - 19 ) தொற்று காரணமாக அரசால் ஊரடங்கு செயல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ள நிலையில் , மாண்புமிகு தமிழக முதல்வரின் செய்திக் குறிப்பின்படி மேல்நிலை இரண்டாமாண்டு மைய மதிப்பீட்டு முகாம் பணிக்கு தளர்வு வழங்கப்பட்டுள்ளதால் திண்டுக்கல் மாவட்டத்தில் விடைத்தாள் திருத்தும் மைய மதிப்பீட்டு முகாமாகச் செயல்படும் முகாம் எண். 17 புனித வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மதிப்பீட்டு மையத்தில் முதன்மைக் தேர்வாளர்கள் மற்றும் கூர்ந்தாய்வு அலுவலர்களாக ( CE & SO ) பணிபுரிய இணைப்பில் காணுமாறு முதுகலை ஆசிரியர்கள் நியமனம் செய்து ஆணையிடப்படுகிறது. 

நியமனம் செய்யப்பெற்றுள்ள முதுகலை ஆசிரியர்களை 27-05-2020 அன்று காலை 9-00 மணி முதல் திண்டுக்கல் , புனித வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மைய மதிப்பீட்டு முகாமில் ( முகாம் எண் . 17 ) முகாம் அலுவலரிடம் தங்களது வருகையைப் பதிவு செய்யும் வகையில் பணிவிடுப்பு செய்யுமாறு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாணையை ரத்து செய்யவோ / மாற்றவோ இயலாது எனத் திட்டவட்டமாகத் தெரிவிக்கலாகிறது. 
நியமனம் செய்யப்பெற்ற தலைமை ஆசிரியர்கள் முதுகலை ஆசிரியர்கள் அரசின் வழிகாட்டுதல்களின்படி முகக்கவசம் அணிந்து , சமூக இடைவெளியுடன் பணிபுரியுமாறும் அறிவுறுத்தப்படுகிறது.

No comments:

Post a Comment

Please Comment