அதிக ருசியில் கொண்டைக்கடலை Chickpea சுண்டல் செய்வது எப்படி - ThulirKalvi Blogs

Latest

Search This Site

அதிக ருசியில் கொண்டைக்கடலை Chickpea சுண்டல் செய்வது எப்படி

அதிக ருசியில் கொண்டைக்கடலை Chickpea சுண்டல் செய்வது எப்படி 

வீட்டில் கொண்டைக்கடலை Chickpea சுண்டல் செய்வது எப்படி என்று பார்ப்போம் . முதலில் கொண்டைகடலையை முன்தின இரவில் ஊற வைத்து, மறுநாள் காலையில் குழையாமல் வேக வைத்துக் கொள்ளவும். 

பின்னர் தண்ணீரை வடித்துக் கொள்ளவும். தொடர்ந்து வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மிளகாயை கிள்ளி வைத்துக் கொள்ளவும். 

அதன்பிறகு ஒரு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டுத் தாளித்து, வெங்காயம், மிளகாய் போட்டு வதக்கி, வேக வைத்த கொண்டைகடலையைப் போட்டுக் கிளறி கொள்ளவும்.பின்பு தேங்காய்த்துறுவல், உப்புத்தூள் போட்டுக் கிளறி, இறக்கி கொள்ளவும். பின்னர் தட்டில் எடுத்து வைத்து பரிமாறவும்.

No comments:

Post a Comment

Please Comment