Health Tips இன்று இயற்கை முறையில் காது பராமரிப்புப் பற்றிப் பார்ப்போம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

Health Tips இன்று இயற்கை முறையில் காது பராமரிப்புப் பற்றிப் பார்ப்போம்

Health Tips இன்று இயற்கை முறையில் காது பராமரிப்புப் பற்றிப் பார்ப்போம்

உள்புறம், நடுப்புறம், வெளிப்புறம் என காதுகளில் மூன்று அடுக்குகள் காணப்படுகின்றன. பெரும்பாலும் வெளிப்புற காது மற்றும் நடுப்புற காது அடுக்குகளில்தான் நோய் தொற்று உருவாகும். காதில் வீக்கம், அரிப்பு, தற்காலிகமாக செவிபுலன் இழப்பு, கடுமையான வலி, லேசான காய்ச்சல் போன்றவை வெளிப்புற காது நோய் தொற்றுக்கான அறிகுறி களாகும். 



மற்றவர் பேசுவதை கூர்ந்து கவனிக்கும் நிலை, கடுமையான வலி, அரிப்பு, காதில் சீழ்படிந்து திரவம் வெளியேறுவது, வாந்தி, காய்ச்சல், தலைச்சுற்றல் போன்றவை நடுப்பகுதி நோய் தொற்றுக்கான அறிகுறி. வீட்டு உபயோக பொருட்களை கொண்டே காது வலி பிரச்சினைக்கு தீர்வு காணலாம். 

 பூண்டு எண்ணெய்: பூண்டு சிறந்த வலி நிவாரணி. ஆண்டிபயாடிக் பண்புகளும் கொண்டது. பூண்ைட எண்ணெய்யாக தயாரித்து காதில் தடவலாம். தோல் நீக்கிய 10 பூண்டு பல்களை எடுத்து நசுக்கிக்கொள்ளவும். வாணலியில் 4 டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கவும். நன்கு சூடானதும் பூண்டு பல்களை கொட்டி நன்கு வதக்கி இறக்கவும்.

Health Tips இன்று நுரையீரலுக்கு வெங்காயம்



அதனை குளிர்வித்து காதில் இரண்டு, மூன்று சொட்டு விடவும். வலி நீங்கத் தொடங்கிவிடும். அல்லது தோல் நீக்கிய பூண்டின் ஒரு பல்லை எடுத்து காதின் வெளிப்புற அடுக்கில் அரைமணி நேரம் வைத்திருக்கலாம். இரவில் தூங்கும்போது காதுக்குள் வைத்துவிட்டு காலையில் எழுந்ததும் அப்புறப்படுத்தலாம். 

 இஞ்சி: இஞ்சியும் சிறந்த வலி நிவாரணியே. நோய் அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் கொண்டது. சிறிதளவு இஞ்சி சாறுடன் மூன்று டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் சேர்க்கவும். இவற்றை கலந்து பாதிக்கப்பட்ட காதில் மூன்று, நான்கு சொட்டுகள் விடவும். மாமர இலையையும் காதுவலிக்கு உபயோகிக்கலாம். அதுவும் ஆண்டிபயாடிக் பண்புகளை கொண்டது. 



ஒரு கைப்பிடி மா இலைகளை எடுத்து அதனை நன்றாக கசக்கி சாறு எடுத்துக்கொள்ளவும். அதனை லேசாக சூடாக்கி பாதிக்கப்பட்ட காதுகளில் ஓரிரு சொட்டுகள் விடவும். காதுகளில் ஏற்படும் தொற்றுகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு மூலிகை டீயையும் உபயோகிக்கலாம். 

அதனை அவ்வப்போது பருகி வருவதன் மூலம் காதுகளில் தொற்றுகள் ஏற்படாமல் பாதுகாக்கலாம். ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்திக்கொள்ளலாம். ஆப்பிள் சிடேர் வினிகரையும் காதுவலிக்கு பயன்படுத்தலாம். இதுவும் நோய் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டது.

Health Tips Today we will talk about ear care

There are three layers of the ear: the inner, middle, and outer. Infections often occur in the outer ear and middle ear layers. Swelling in the ear, itching, temporary hearing loss, severe pain, mild fever are the symptoms of external ear infections. Symptoms of mild to moderate infection include vomiting, fever, dizziness, acute pain, itching, fluid loss in the ear. The problem of ear pain can be solved with household appliances.

Garlic Oil: Garlic is an excellent pain reliever. It also has antibiotic properties. It can be prepared as a pure oil. Take 10 garlic bulbs removed from the skin and suppress. In a skillet, heat 4 teaspoons of good oil. Heat the garlic and warm it well. Let it cool and leave two or three drops in the ear. The pain starts to go away. Or you can take a tooth off the skimmed garment and hold it in the outer layer of the ear for half an hour. You can put it in your ear while you sleep at night and wake up in the morning.


Ginger: Ginger is also an excellent pain reliever. It also has anti-inflammatory properties. Add three tbsp olive oil with a little ginger juice. Mix three or four drops in the affected ear.

The mango leaf can also be used for deafness. It also has antibiotic properties. Take a handful of mango leaves and squeeze it well. Heat it lightly and leave a few drops on the affected ears.

Herbal tea can also be used to treat ear infections. It can be used to protect the ear from getting infected by periodically. Improve overall health.

Apple cider vinegar can also be used for deafness. It also has anti-inflammatory properties.

No comments:

Post a Comment

Please Comment