தமிழ் உச்சரிப்பை போன்றே ஆங்கிலத்தில் 1,018 ஊர்களின் பெயர்கள் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

தமிழ் உச்சரிப்பை போன்றே ஆங்கிலத்தில் 1,018 ஊர்களின் பெயர்கள்

தமிழ் உச்சரிப்பை போன்றே ஆங்கிலத்தில் 1,018 ஊர்களின் பெயர்கள் தமிழக அரசு திருத்தம் செய்தது 




தமிழகத்தில் உள்ள 1,018 ஊர் களின் பெயர்களை, தமிழ் உச்சரிப் பில் இருப்பதைப் போன்றே ஆங் கிலத்திலும் திருத்தம் செய்து தமிழக அரசு அரசிதழில் வெளியிட் டுள்ளது. 

தமிழகத்தில் பல ஊர்களின் பெயர்கள் ஏதேனும் ஒரு காரணத்து காக சூட்டப்பட்டிருந்தாலும், அவற்றை ஆங்கிலத்தில் உச் சரிக்கும்போது மாறிவிடுகிறது. உதாரணமாக சென்னை எழும்பூர் என்பது ஆங்கிலத்தில் எக்மோர் என்றும், திருவல்லிக்கேணி என்பது டிரிப்லிகேன் என்றும் உச்சரிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், கடந்த 2018-19ம் ஆண்டு தமிழ் வளர்ச்சித்துறை மானிய கோரிக்கையின்போது, ‘‘தமிழகத்தில் உள்ள ஊர்ப்பெயர் களை தமிழ் உச்சரிப்பை போன்றே ஆங்கிலத்திலும் அமையும் வகை யில் உயர்மட்டக்குழு அமைக் கப்பட்டு செயல்படுத்தப்படும்’’ என்று அறிவிக்கப்பட்டது. 

                                                       DOWNLOAD GAZETTE COPY HERE

இதன் படி, மாவட்ட ஆட்சியர்கள் பரிந் துரையுடன் திருத்தம் செய்யப் படவேண்டிய ஊர்ப்பெயர்களின் பட்டியல் குறித்து விவாதிக்கப் பட்டு இறுதிப் பட்டியல் தயாரிக் கப்பட்டுள்ளது. இப்பட்டியலின்படி, சென்னை யில் 96 ஊர்களுக்கான பெயர்களின் ஆங்கில உச்சரிப்பு பரிந்துரைக்கப் பட்டது. 

அதில், தண்டையார்ப் பேட்டை, 
புரசைவாக்கம், 
வேப் பேரி, 
வஉசி நகர், 
கொடுங்கையூர், 
எருக்கஞ்சேரி, 
மல்லிகைச்சேரி, 
செஞ்சேரி, 
சிந்தாதிரிப்பேட்டை, 
மயிலாப்பூர், 
சைதாப்பேட்டை, 
ஈக்காட்டுத்தாங்கல், 
கிண்டி பூங்கா, 
மடிப்பாக்கம், 
காரப்பாக்கம், 
சோழிங்கநல்லூர், 
உத்தண்டி, 
செம்மஞ்சேரி, 
மதனந்தபுரம், 
மணப் பாக்கம், 
நந்தம்பாக்கம், 
ஆதம் பாக்கம், 
தலக்கனாஞ்சேரி, 
அம் பத்தூர், 
காக்காப்பள்ளம், 
புத்த கரம், 
வடபெரும்பாக்கம், 
விளக்குப் பட்டு, 
எலந்தஞ்சேரி, 
சடையங்குப் பம், 
திருவொற்றியூர், 
சாத்தாங் காடு, 
இடையன்சாவடி ஆகிய ஊர்களின் பெயர்களின் உச்சரிப்பு ஆங்கிலத்தில் திருத்தம் செய்யப் பட்டுள்ளது. 

இதுதவிர, திருவள்ளூர் மாவட்டத்தில் 

பூவிருந்தவல்லி, 
திருமுல்லைவாயல், 
கோயில் பதாகை, 
திருநின்றவூர், 
அக்ர ஹாரமேல், 
தேர்வாய்கண்டிகை உள்ளிட்ட ஊர்களின் பெயர்களின் உச்சரிப்புக்கேற்ப ஆங்கிலத்தில் மாற்றப்பட்டுள்ளது. 

உயர்மட்டக் குழு அமைப்பு மேலும், தூத்துக்குடி என்ற பெயர் டுடிகுரின் என்பதில் இருந்து தூத்துக்குடி என மாற்றப்பட்டுள் ளது. 

கடலூர், சிவகங்கை, தரும புரி,புதுக்கோட்டை, பெரம்பலூர், காஞ்சிபுரம், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள 1,018 ஊர்களின் பெயர்கள் தமிழ் உச்சரிப்புக்கேற்ப ஆங்கிலத்தில் மாற்றப்பட்டு தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Please Comment