10-ம் வகுப்பு தேர்வு மதிப்பெண் பட்டியலில் குளறுபடி செய்யும் பள்ளிகள் மீது நடவடிக்கை - ThulirKalvi Blogs

Latest

Search This Site

10-ம் வகுப்பு தேர்வு மதிப்பெண் பட்டியலில் குளறுபடி செய்யும் பள்ளிகள் மீது நடவடிக்கை

10-ம் வகுப்பு தேர்வு மதிப்பெண் பட்டியலில் குளறுபடி செய்யும் பள்ளிகள் மீது நடவடிக்கை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எச்சரிக்கை 

10-ம் வகுப்பு தேர்வு மதிப்பெண்கள் பட்டியலில் குளறுபடி செய்யும் பள்ளிகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எச்சரித் துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபி அரு கில் உள்ள குண்டேரிப்பள்ளம் ஓடையில் கட்டப்பட்டுள்ள தடுப் பணையைப் பார்வையிட்ட அமைச் சர் செய்தியாளர்களிடம் கூறியது: 

 குண்டேரிப்பள்ளம் ஓடையில் ரூ.5.94 கோடி மதிப்பில் 2 தடுப்பணைகள் கட்டப்படுகிறது. மேலும், புதிதாக ஒரு தடுப்பணை கட்டுவது குறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும். புதிதாக கட்டப்படும் தடுப்பணையின் மூலம் 4 கிமீ தூரத்துக்கு நீர்மட்டம் உயரும். இதைப்போல, பவானி ஆற்றி லும் 4 இடங்களில் தடுப்பணை கட்டுவதற்கும் ஆய்வு பணி முடிந்து, மதிப்பீடு தயாரிக்கப்பட்டு முதல்வரின் கவனத்துக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. 

இதன் மூலம் சுற்றுப்புறப்பகுதியில் 50 கிமீ தூரத்துக்கு நீர்மட்டம் உயரும். வினோபா பூமிதான இயக்க நிலங்களில் குடியிருப் பவர்களுக்கு இரண்டாவது கட்டமாக 46 பேருக்கு வீட்டுமனை பட்டா விரைவில் வழங்கப்படும். 10-ம் வகுப்பு மாணவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் பள்ளிக்கல்வித்துறையிடம் உள்ளது. 

எனவே மதிப்பெண்கள் பட்டியல் தயாரிக்கும்போது குளறு படி செய்யும் பள்ளிகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மதிப்பெண்கள் பட்டியல் தயாரிக்கும் போது உள்ள குறை களை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 🔥👉இந்தச் செய்திப் பிடித்திருந்தால் தயவுசெய்து ஷேர் செய்யுங்கள்

No comments:

Post a Comment

Please Comment