சென்னையில் 10-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பேருந்து சேவை
சென்னையில்
10-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள், தேர்வு மையங்களுக்கு செல்ல சிறப்பு
போக்குவரத்து ஏற்பாடுகளை கல்வித் துறை மேற்கொண்டுள் ளது.
இதுகுறித்து சென்னை மாவட்ட
முதன்மை கல்வி அதி காரி அனிதா வெளியிட்ட செய்தி:
ஊரடங்கால் ஒத்திவைக்கப் பட்ட 10-ம்
வகுப்பு பொதுத்தேர்வு ஜூன்15-்ல் தொடங்குகிறது. இதை யடுத்து ஆசிரியர்கள், மாணவர்
களுக்கு பயணிக்க ஏதுவாக 41 தடங்களில் 102 சிறப்புப் பேருந்து கள் இயக்கப்பட உள்ளன.
தேர்வு நாட்களில் தினமும் காலை 7.30 மற்றும் 8 மணிக் கும், தேர்வு முடிந்த பின்
மதியம் 1.45 மற்றும் 2.15 மணிக்கும் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இதுதவிர
தேர்வுக்கான முன்னேற்பாடு பணி களை மேற்கொள்வதற்கு ஆசிரி யர்கள், பணியாளர்கள்
தாங்கள் பணிபுரியும் பள்ளிக்கு சென்றுவர ஏதுவாக நாளை (ஜூன் 8) முதல் காலை 9
மணிக்கும், மாலை 4 மணிக்கும் வேளச்சேரி, செங்குன் றம், அம்பத்தூர், பெசன்ட் நகர்
உட் பட 41 தடங்களில் பேருந்து வசதி கள் செய்யப்பட்டுள்ளன. இவ் வாறு அதில்
கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே சென்னையில் நோய் கட்டுப்படுத்தப்பட்ட பகுதி களில் உள்ள
மாணவர்கள் தேர்வு எழுத 115 சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர் கள்
தேர்வுக்கு சென்றுவர போக்கு வரத்து வசதிகளும் ஏற்படுத்தப் பட்டுள்ளது என கல்வித்
துறையும் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
Please Comment