ஜூன் 26ஆம் தேதி கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் மாவட்ட ஆட்சியர் தகவல் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

ஜூன் 26ஆம் தேதி கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் மாவட்ட ஆட்சியர் தகவல்

ஜூன் 26ஆம் தேதி கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் மாவட்ட ஆட்சியர் தகவல்

வீர தீர செயல் புரிந்த பெண்களுக்கு கல்பனா சாவ்லா விருது விண்ணப்பிக்க 26 ஆம் தேதி கடைசிநாள் கலெக்டர் தெரிவித்துள்ளார். அவர் 2020 ஆம் ஆண்டில் கல்பனா சாவ்லா விருது துணிச்சலான தைரியமான மற்றும் வீர தீர செயல்கள் புரிந்த பெண்களுக்கான விருது சுதந்திர தினத்தன்று முதலமைச்சரால் வழங்கப்பட உள்ளது. 

மேற்காணும் விருதிற்கான விபரங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதள முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் . விண்ணப்பங்கள் அடங்கிய உறையின்மேல் கல்பனா சாவ்லா விருது 2020 என குறிப்பிட்டு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் 
மாவட்ட விளையாட்டு அலுவலர்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்
 மகாத்மா காந்தி விளையாட்டு அரங்கம்
சேலம் 636007 என்ற முகவரிக்கு 26ம் தேதிக்குள் வந்து சேருமாறு அனுப்பி வைக்க வேண்டும் இவ்வாறு மாவட்ட கலெக்டர் ராமன் தெரிவித்துள்ளார்

🔥👉இந்தச் செய்திப் பிடித்திருந்தால் தயவுசெய்து ஷேர் செய்யுங்கள்

No comments:

Post a Comment

Please Comment