2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு 



தென்மேற்கு பருவக் காற்றால், மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. 

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக் குநர் நா.புவியரசன் நேற்று செய்தி யாளர்களிடம் கூறியதாவது: 

தமிழகத்தில் தென்மேற்கு பருவக் காற்று காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 3 செமீ, தேனி மாவட்டம் தேக்கடியில் 2 செமீ மழை பதிவாகியுள்ளது. 

வெப்பநிலை நேற்று மாலை 5.30 மணி வரை பதிவான வெப்பநிலை அளவுகளின்படி அதிகபட்சமாக சென்னை விமான நிலையம், வேலூர் ஆகிய இடங்களில் தலா 104 டிகிரி, மதுரை விமான நிலையம், திருச்சி ஆகிய இடங்களில் தலா 102 டிகிரி, கடலூரில் 101 டிகிரி, சென்னை நுங்கம்பாக்கம், நாமக்கல், பரங்கிப்பேட்டை, புதுச்சேரி ஆகிய இடங்களில் 100 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Please Comment