கரோனா குறித்த விழிப்புணர்வு (Awareness of Corona)அரசுப் பள்ளிக்கு சிறப்பு விருது
கரோனா குறித்த விழிப்புணர்வு (Awareness of Corona) அரசுப் பள்ளிக்கு சிறப்பு
விருது பள்ளி மாணவர்கள் மூலம் கரோனா தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஏற் படுத்திய
ராஜாவூர் அரசு பள் ளிக்கு சிறப்பு விருது அறிவிக்கப் பட்டுள்ளது.
திருப்பத்தூர்
மாவட்டம் கந்திலி அடுத்த ராஜாவூரில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக் கப்
பள்ளியின் தலைமை ஆசிரியை இந்திரா, ஊரடங்கு காலத்தில் பள்ளி மாணவர்கள், பெற்றோர்
பாதுகாப்புடன் இருப்பது குறித்த விழிப்புணர்வு வீடியோவை வெளி யிட்டார்.
இது பள்ளி
மாணவர்கள் மட்டுமின்றி பெற்றோரிடம் அதிக வரவேற்பை பெற்றது. அரசுப் பள்ளி தலைமை
ஆசிரிi யையுடன் இணைந்து அதே பள்ளி யில் 2-ம் வகுப்பு படித்து வரும் மாணவிகள் தேவிகா,
சிவானி ஆகியோர் கரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இந்நிலையில்,
சென்னையைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறு வனம் ராஜாவூர் அரசு பள்ளிக்கு சிறப்பு
விருதை வழங்குவதாக அறி வித்துள்ளது. மாணவிகள் நடித்து வெளியான விழிப்புணர்வு வீடி
யோவை 3 லட்சம் பேர் பார்த்துள்ள தால் இந்தச் சிறப்பு விருதுக்கு அரசு பள்ளி
தேர்வாகியுள்ளது.

No comments:
Post a Comment
Please Comment