சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு தவிர மற்ற மாவட்டங்களில்
பேருந்துகளை இன்று முதல் இயக்க அனுமதி
புதிய தளர்வுகளுடன் ஜூன் 30 வரை ஊரடங்கை நீட்டித்து முதல்வர் உத்தரவு
தமிழகத்தில் பல்வேறு தளர்வுகளு டன் ஜூன் 30-ம் தேதி வரை ஊர டங்கு
நீட்டிக்கப்படுவதாக முதல் வர் பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னை, திருவள்ளூர்,
காஞ்சி புரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள் தவிர இதர மாவட் டங்களில்
இன்றுமுதல் (ஜூன் 1) பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படுகிறது என்றும்
அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் பழனி சாமி நேற்று வெளியிட்ட அறிக்கை யில் கூறியிருப்பதாவது:
கரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மை சட்டத்தின்
கீழும், மத்திய உள்துறை அமைச் சகத்தின் அறிவிக்கை அடிப் படையிலும் தற்போதுள்ள ஊர
டங்கு உத்தரவு ஜூன் 30-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை நீட்டிக்கப்படுகிறது.
ஏற்கெனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடன், சில புதிய தளர்வுகளுடன்
ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது.
தொடரும் தடைகள்
வழிபாட்டுத் தலங்களில் பொது மக்கள் வழிபாடு மற்றும் அனைத்து மதம் சார்ந்த
கூட்டங்களுக்கான தடை நீடிக்கிறது.
நீலகிரி மாவட்டத்துக்கும், கொடைக்கானல், ஏற்காடு சுற்றுலா தலங்களுக்கும்
வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்லக் கூடாது.
தங்கும் வசதியுடன்கூடிய ஓட் டல்கள், ரிசார்ட்டுகள், பிற விருந் தோம்பல்
சேவைகளுக்கும் தடை தொடரும். இருப்பினும், மருத் துவம், காவல் துறையினர், அரசு
அலுவலர்கள் உட்பட வெளிமாநி லத்தவர் மற்றும் தனிமைப்படுத் தப்படும் பணிகளுக்கு
மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது.
வணிக வளாகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங் கள், ஆராய்ச்சி
நிறுவனங்கள், அனைத்து கல்வி நிறுவனங்களுக் கும் தடை நீடிக்கிறது. கல்வி நிறு
வனங்கள் இணையவழிக் கல்வி கற்றலை தொடர்வதுடன் அதை ஊக்கப்படுத்தலாம்.
மத்திய உள்துறை அமைச் சகத்தால் அனுமதிக்கப்பட்ட பணி களைத் தவிர சர்வதேச விமான
போக்குவரத்து, மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்கு வரத்து, மெட்ரோ ரயில்,
மின்சார ரயில்களுக்கு தடை நீடிக்கும்.
திரையரங்குகள், உடற்பயிற் சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள், கேளிக்கை கூடங்கள்,
மதுக்கூடங் கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், கடற்கரை, சுற்றுலா தலங்கள்,
உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் போன்ற பொது மக்கள் அதிகம் கூடும் இடங்
களுக்கும், அனைத்து வகையான சமு தாய, அரசியல் விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாச்சார
நிகழ்வுகள், சமய, கல்வி, விழாக் கள், கூட்டங்கள், ஊர்வலங்களுக் கும் தடை
நீடிக்கிறது.
தொற்றின் தன்மைக்கேற்ப படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்படும்.
இறுதி ஊர்வலம், சடங்குகளில் 20 பேருக்கு மேல் பங்கேற்கக் கூடாது. திருமண
நிகழ்ச்சிகளில் 50 பேர் வரை மட்டுமே பங்கேற்ற வேண்டும்.
மண்டலங்கள் பிரிப்பு
தமிழகத்தில் பொது பேருந்து போக்குவரத்து இன்றுமுதல் (ஜூன் 1)
அனுமதிக்கப்படுகிறது. அதற்காக மாநிலம் 8 மண்டலங் களாக பிரிக்கப்படுகிறது. இதில்
7, 8 மண்டலங்களுக்குட்பட்ட சென்னை, காஞ்சிபுரம், செங்கல் பட்டு, திருவள்ளூர் ஆகிய
4 மாவட் டங்கள் தவிர இதர மண்டலங்களில் 50 சதவீத பேருந்துகள் இன்றுமுதல்
இயக்கப்படும்.
அங்கீகரிக்கப்பட்ட தடங்களில் தனியார் பேருந்துகளும் இயக்க
அனுமதிக்கப்படுகிறது. பேருந்துகளில் உள்ள மொத்த இருக்கைகளில் 60 சதவீத இருக்
கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க வேண்டும். ஒரே மண்டலத்துக்குள்
பயணிப்பவர் களுக்கு இ-பாஸ் தேவையில்லை.
அனைத்து வகையான வாக னங்களும் மண்டலங்களுக்குள் இயங்க இ-பாஸ் தேவையில்லை.
வெளிமாநிலங்களுக்கு சென்று வரவும், வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு
வரவும், மண்டலங்களுக்கு இடையே சென்று வரவும் இ-பாஸ் முறை தொடர்ந்து நடைமுறையில்
இருக்கும்.
சென்னையில் தளர்வு
சென்னை காவல் எல்லைக்குட் பட்ட பகுதிகளில் நோய்க் கட்டுப் பாட்டு பகுதிகள் தவிர
மற்ற பகுதி களில் கீழ்க்கண்ட பணிகளுக்கு மட் டும் அனுமதி அளிக்கப்படுகிறது.
தகவல் தொழில்நுட்பம் மற்றும் அது சார்ந்த சேவை நிறுவனங்கள் 20 சதவீத பணியாளர்கள்
அல்லது அதிகபட்சம் 40 நபர்களுடன் இயங் கலாம். அந்த நிர்வாகமே ஏற்பாடு செய்யும்
வாகனங்களில் பணி யாளர்களை அழைத்து வர வேண்டும்.
அனைத்து தனியார் நிறுவனங் களும் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம். முடிந்தவரை
பணி யாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரி வதை தனியார் நிறுவனங்கள் ஊக்குவிக்க
வேண்டும்.
வணிக வளாகங்கள் தவிர்த்து, அனைத்து ஷோரூம்கள், நகை, ஜவுளி போன்ற பெரிய கடைகள்
குளிர்சாதன வசதி இல்லாமல் 50 சதவீத பணியாளர்களுடன் செயல் படலாம். ஒரேநேரத்தில் 5
வாடிக்கை யாளர்கள் மட்டும் கடைக்குள் வரு வதை உறுதி செய்து, தகுந்த சமூக
இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
வரும் 8-ம் தேதி முதல் ஓட்டல் களில் 50 சதவீத இருக்கையில் சமூக இடைவெளியை
கடைபிடித்து அமர்ந்து உணவு சாப்பிடலாம்.
குளிர்சாதன வசதியை இயக் கக் கூடாது. அதுபோல தேநீர் கடை களில் உள்ள மொத்த
இருக்கையில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் அமர்ந்து தேநீர் அருந்த அனு
மதிக்கப்படுகிறது. வரும் 7-ம் தேதி வரை டீக்கடைகள், உணவு விடுதிகளில் பார்சல்
மட்டும் வழங்க வேண்டும். காய்கறிக் கடைகள், மளிகைக் கடைகள் காலை 6 முதல் இரவு 8
மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது.
வாடகை, டாக்ஸி வாகனங்களை ஓட்டுநர் தவிர்த்து 3 பயணிகளுடன், மண்டலத்துக்குள்
இ-பாஸ் இல் லாமல் இயக்கலாம். ஆட்டோக் களில் ஓட்டுநர் தவிர்த்து, 2 பயணி கள்
செல்லலாம். முடிதிருத்தகம், அழகு நிலையங்கள் குளிர்சாதன வசதியை பயன்படுத்தாமல்
அரசின் செயல்பாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி இயங்கலாம்.
ஐடி நிறுவனங்களுக்கு அனுமதி
சென்னை காவல் எல்லைக்குட் பட்ட பகுதிகள், நோய்க் கட்டுப் பாட்டு பகுதிகள் தவிர,
தமிழகத் தின் பிற பகுதிகளில் தொழில் நிறு வனங்கள், தனியார் நிறுவனங்கள், தகவல்
தொழில்நுட்பம் மற்றும் அது சார்ந்த சேவை நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன்
இயங்கலாம். இருப்பினும், 20 சத வீத பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய
ஊக்குவிக்க வேண்டும். டாஸ்மாக் உள்ளிட்ட இதர கடைகள் காலை 10 முதல் இரவு 8 மணி வரை
செயல்படலாம்.
ரூ.2,500 மதிப்பூதியம்
பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூடக்கூடாது என்ற நடைமுறை தொடர்ந்து அமலில்
இருக்கும். தமிழகம் முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் எந்த தளர்வுகளும்
இல்லாமல் ஊரடங்கு முழுமையாக கடைபிடிக் கப்படும். சென்னை காவல் எல் லைக்குட்பட்ட
பகுதிகளில் பணி புரியும் ஒவ்வொரு தூய்மைப் பணியாளருக்கும் சிறப்பினமாக ரூ.2,500
மதிப்பூதியம் வழங்கப் படும்.
முகாம்களில் தங்க வைக்கப் பட்டுள்ளவர்களின் வாழ்வா
தாரத்தை கருத்தில்கொண்டு சென்னை மாநகராட்சியில் மட்டும் அவர்கள் முகாம்களில்
இருந்து வீடு திரும்பும்போது தலா ரூ.1,000 வழங்கப்படும்.
அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும் மக்களின் ஒத் துழைப்பு இல்லையென்றால்,
நோய்ப் பரவலை தடுக்க இயலாது. எனவே, பொதுமக்கள் வெளியில் செல்லும்போது முகக்கவசம்
அணி வது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அரசின் முயற்சிகளுக்கு பொதுமக் கள்
ஒத்துழைப்பு அளிக்க வேண் டும். இவ்வாறு அறிக்கையில் முதல் வர் பழனிசாமி
தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
Please Comment