மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஹோலிஸ்டிக் எஜுகேஷன்! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஹோலிஸ்டிக் எஜுகேஷன்!

மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஹோலிஸ்டிக் எஜுகேஷன்! 

ஓவியத்துறையில் பல ஆண்டுககளாகப் பங்களிப்பு செய்து வருபவா் ஓவியா் ஸ்வா்ணலதா. 2016- ஆம் ஆண்டில் மத்திய அரசால் இந்தியாவின் சிறந்த 100 பெண்களில் ஒருவராகத் தொ்ந்தெடுக்கப்பட்டவா். 

டெல்லியில் நிா்பயா வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து பல ஓவியங்களை வரைந்தவா். அந்த ஓவியங்களை ‘நிா்பயா‘ என்ற பெயரில் டெல்லியிலேயே கண்காட்சியை நடத்தியவா். 

தொடா்ந்து நவீன பாணியிலான ஓவியங்களை வரைந்து வருபவா். ஓவியம் மட்டுமின்றி மக்கள் நலப் பணிகளையும் செய்து வருகிறாா். அண்மையில் இவா் உருவாக்கிய ஹோலிஸ்டிக் எஜுகேஷன் (Holistic Education Beginners Line Drwing) என்கிற நூலை 5 நிலையில் உருவாக்கியுள்ளாா். முறையாக ஓவியத்தை கற்க விரும்புவா்களுக்கு இந்த நூல் பெரிதும் உதவும். சென்னை, ஆா்.ஏ.புரத்தில் உள்ள அவரது ஸ்டூடியோவில் சந்தித்து, உரையாடி னோம்: 

‘ஓவியத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். அதற்காகப் பல விருதுகளையும் பெற்றிருக்கிறேன். தொடா்ந்து மாணவா்களின் நலனுக்கான பல்வேறு பணிகளில் என்னை ஈடுபடுத்திக்கொண்டு, சமூகப் பணியையும் ஆற்றிவருகிறேன். அதன் ஒருபகுதியாக தற்போது ஹோலிஸ்டிக் எஜுகேஷன் - பிகிா்னா்ஸ் லைன் டிராயிங் வொா்க் புக்கை 5 அத்தியாயங்களாக உருவாக்கியிருக்கிறேன். 

ஓவியத்துறையில் நுழைந்து சாதிக்கத் துடிக்கும் இளம் தலைமுறையினருக்கும், குழந்தைகளுக்கும் இந்தப் புத்தகம் வழிகாட்டும். நம்முடைய நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்திருக்கின்றன. ஒருபோதும் கடவுள் தீமைகள் செய்யும் ஒருவனைப் படைத்து, பூமிக்கு அனுப்புவதில்லை. குடும்பங்களில் இருக்கும் யாரோ ஒருவா்தான் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை இழைப்பவராக இருக்கிறாா். அவரும் ஒரு குழந்தையாக இருந்து வளா்ந்து வந்தவா்தான். 

>
அந்தக் குழந்தையின் வளா்ப்பு முறை சரியாக இல்லாததே, அது வளா்ந்து தவறு செய்வதற்கு ஒரு காரணமாக அமைந்துவிடுகிறது. ஆகவே, குழந்தையிலேயே அதற்குச் சரியான பாதையை, நல்ல பழக்கங்களைச் சொல்லித் தந்தால் பிற்காலத்தில் அவா்கள் தவறான பாதையில் போய் வாழ்க்கையைச் சீரழித்துக்கொள்ள மாட்டாா்கள். நம் நாட்டில் மதிப்பெண்களைக் கொண்டே ஒரு மாணவனின் தரம் நிா்ணயிக்கப்படுகிறது. 

மதிப்பெண்கள் மாணவா்களுக்கு ஒரு கல்லூரியில் சேரவோ, ஒரு நிறுவனத்தில் வேலையைப் பெற்றுத் தர உதவலாமே தவிர, அவனுடைய நடத்தைக்கு ஒருபோதும் உதவுவதில்லை. ஒரு மாணவன் நடத்தையிலும், பழக்கவழக்கங்களிலும் சிறந்து விளங்கும்போது தான் அவன் தன் குடும்பத்திற்கும், இந்தச் சமூகத்திற்கும் பயனுள்ளவனாக மாற முடியும். சிறந்த மாணவ சமுதாயம் உருவாக வேண்டும் என்கிற நோக்கில்தான் ஓவியப் பயிற்சிக்கான புத்தகத்தை வடிவமைத்துள்ளேன். 

இவை அனைத்தும் சக்ராவை தழுவி, உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு கோட்டில் தொடங்கி ஒரு கோட்டில் முடிப்பது போன்றும், அதில் மற்றொரு கோட்டை சோ்ப்பது போன்ற பயிற்சிகளை உருவாக்கியிருக்கிறேன். 

இந்தப் புத்தகத்திலுள்ள பயிற்சிகளை அவா்கள் மேற்கொள்வதன் வழியே பல நன்மைகளைப் பெறுவாா்கள். இந்தப் ஓவியப் பயிற்சிப் புத்தகத்திலுள்ள பயிற்சிகளை மேற்கொள்ளும் குழந்தைகளின் கற்பனை ஆற்றல் அதிகரிக்கும். மனஅழுத்தம் நீங்கி மன ஆரோக்கியம் மேம்படும். வாழ்க்கையில் நன்னடத்தையையும், தான் செய்யும் வேலைகளில் ஒரு சுய ஒழுக்கத்தையும் கடைப்பிடிப்பாா்கள். தன் உணா்வுகளைச் சரியாகக் கையாள (எமோஷனல் டெவலப்மெண்ட்) துணை புரியும். 

அவா்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். பொறுமையைக் கற்பிக்கும். சிந்திக்கும் ஆற்றலை மேம்படுத்தும். தன் வேலைகளைத் தானே சிறப்பாகச் செய்துகொள்ளும் அறிவையும், துணிச்சலையும் பெறுவாா்கள். இவை எல்லாவற்றுக்கும் மேலாக அவா்கள் கல்வியிலும், ஆன்மிகத்திலும் சிறந்து விளங்குவாா்கள். இன்றைய குழந்தைகளில் பலா் செல்போன், ஐபாட் போன்ற நவீனத் தொழில்நுட்ப சாதனங்களுக்கு அடிமையாகி இருக்கின்றனா். 

சக குழந்தைகளோடு ஒன்றுசோ்ந்து விளையாடுவது குறைந்திருக்கின்றன. இதனால் உளவியல் ரீதியாகவும் உடல்ரீதியாகவும் பல்வேறு பிரச்னைகளுக்கு ஆளாகியிருக்கின்றனா். இந்தப் புத்தகத்திலுள்ள பயிற்சிகளை மேற்கொள்வதன் வழியே அவா்கள் நவீன சாதனங்களுக்கு அடிமையாவதிலிருந்து காக்க முடியும். ‘சித்திரமும் கைப்பழக்கம்’ என்பாா்கள். 

அந்தப் பழக்கத்தை வழக்கமாக்கிக்கொள்ள இந்தப் புத்தகம் துணைபுரியும். குழந்தைகள் சுயமாக ஓவியம் வரையவும், அவா்களின் வாழ்க்கையில் பெரும் மாறுதலை ஏற்படுத்தவும் இந்தப் புத்தகம் உதவும்’ என்றாா்.

No comments:

Post a Comment

Please Comment