இளைஞர்களுக்கான நூல்களை பரிந்துரை செய்த விவேக்
கொரோனா காலகட்டத்தில்
சமூகவலைதளங்கள் வாயிலாக ரசிகர்களுடன் உரையாடி வரும் பிரபலங்கள், அவர்களின் பல்வேறு
கேள்விகளுக்கும் பதிலளித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விவேக்கிடம் ரசிகர்
ஒருவர், இளைஞர்களுக்கு தாங்கள் பரிந்துரைக்கும் நூல்களை ( கண்டிப்பாக படிக்க
வேண்டிய) குறிப்பிடலாமே என்று கேள்வி எழுப்பினார்.
இது குறித்து நடிகர் விவேக்
பதில் அளித்திருப்பதாவது:
“எத்தனையோ மிக நல்ல புத்தகங்கள் உள்ளன. இப்போது என்
மனதுக்குப் பட்டதை பரிந்துரைக்கிறேன். இனிய எளிய தேன் தமிழ் பருக: திருவருட்பா, சுய
வரலாறு : த அதர் சைட் ஆப் மீ, உடற்பயிற்சி மேக் த கனெக்ஷன், யோகநெறி அறியலிவிங்
வித் எச்.மாஸ்டர்ஸ். மாணவர்களுக்கு:அக்னி சிறகுகள்” இவ்வாறு அவர்
குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment
Please Comment