கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பம் கடைசி நாள் ஜூன் 30 


தமிழக அரசின் ‘கல்பனா சாவ்லா விருது’ க்கு வரும் 30-ம் தேதிக் குள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: 

துணிவு மற்றும் வீர சாகச செயலுக்கான ‘கல்பனா சாவ்லா விருது’ ஆண்டுதோறும் தமிழக முதல்வரால், சுதந்திர தின விழா வின்போது வழங்கப்படுகிறது. 

ரூ.5 லட்சத்துக்கான காசோலை, ஒரு பதக்கம் ஆகியவை இதில் அடங்கும். தமிழகத்தைச் சேர்ந்த துணிச்சலான மற்றும் வீர சாகச செயல் புரிந்த பெண் விண்ணப் பதாரர் மட்டுமே இந்த விருதைப் பெற தகுதியுள்ளவராவார். 

இந்த 2020-ம் ஆண்டுக்கு வழங்கப்பட உள்ள விருதுக்கான விண்ணப்பங்களை, விரிவான தன் விவரக் குறிப்பு, உரிய விவரங்கள் மற்றும் அதற்குரிய ஆவணங்களுடன், 

அரசு முதன்மை செயலாளர், 
பொதுத் துறை, 
தலைமைச் செயலகம், 
சென்னை- 600009 

என்ற முக வரிக்கு வரும் 30-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். விருது பெற தகுதியானவர், அரசால் நியமிக்கப்பட்ட தேர்வுக் குழுவால் தேர்வு செய்யப்படு வார்.

No comments:

Post a Comment

Please Comment