தற்போது நாம் எதிர்கொள்ளும் அறிவியல் சிக்கல்களுக்கு நானோ தொழில்நுட்பத்தில் தீர்வு நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கருத்து - ThulirKalvi Blogs

Latest

Search This Site

தற்போது நாம் எதிர்கொள்ளும் அறிவியல் சிக்கல்களுக்கு நானோ தொழில்நுட்பத்தில் தீர்வு நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கருத்து

தற்போது நாம் எதிர்கொள்ளும் அறிவியல் சிக்கல்களுக்கு நானோ தொழில்நுட்பத்தில் தீர்வு நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கருத்து 

 நாம் எதிர்கொள்ளும் அறிவி யல் சிக்கல்கள், சவால் களுக்கு நானோ தொழில்நுட் பம் மூலமாக தீர்வு காணலாம் என்ற நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ஆண்ட்ரே ஜெய்ம் தெரிவித்தார். 

 வேலூர் விஐடி பல்கலைக் கழகத்தில் நானோ தொழில் நுட்ப மையம் சார்பில் காணொலி காட்சி மூலம் மேம்பட்ட நானோ பொருட் கள் மற்றும் பயன்பாடுகள் குறித்த சர்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது. 

 கருத்தரங்கை இந்திய அரசு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் செயலாளர் அசுதோஷ் சர்மா தொடங்கி வைத்துப் பேசும் போது, ‘‘நானோ தொழில்நுட் பம் பலதரப்பட்ட அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல் துறையில் உள்ள சிக்கல்களைத் தீர்க்கிறது. நானோ தொழில்நுட்பத்தை வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு வாய்ப்புகளாகவும் மாற்றலாம்” என்றார். 2010-ம் அண்டு இயற்பியல் நோபல்பரிசு பெற்ற இங்கிலாந்தின் மான்செஸ்டர் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் ஆண்ட்ரே ஜெய்ம் பேசும் போது, 

‘‘தற்போது நாம் எதிர் கொள்ளும் பல்வேறு அறி வியல் சிக்கல் மற்றும் சவால் களை நானோ தொழில் நுட்பம் உதவி கொண்டு தீர்க்கலாம்’’ என்றார்.

  மிகப்பெரிய பங்கு 

கருத்தரங்கில் விஐடி வேந் தர் கோ.விசுவநாதன் தலைமை வகித்துப் பேசும் போது, ‘‘எதிர்கால அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை யில் புரட்சி ஏற்படும் வகை யில் சுகாதாரம், ஆற்றல், சுற்றுச்சூழல் மற்றும் மின் னணுவியல் உட்பட பல் வேறு துறைகளில் நானோ தொழில்நுட்பம் மிகப்பெரிய பங்கு வகிக்கப் போகிறது” என்றார். 

 கருத்தரங்கில் விஐடி துணைத் தலைவர் சங்கர் விசு வநாதன், இணை துணை வேந்தர் எஸ்.நாராயணன், நானோ தொழில்நுட்ப மையத்தின் இயக்குநர் நிர் மலா கிரேஸ் உள்ளிட்ட 2 ஆயிரத்துக்கும் மேற் பட்டோர் பங்கேற்றனர். 🔥👉இந்தச் செய்திப் பிடித்திருந்தால் தயவுசெய்து ஷேர் செய்யுங்கள்

No comments:

Post a Comment

Please Comment